Latest Updates
-
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்!
1 கிலோ மட்டன் வாங்குனா.. இந்த பக்குவத்துல குழம்பு செய்யுங்க.. 3 வேளையும் வெச்சு சாப்பிடுவீங்க..
Mutton Kuzhambu Recipe In Tamil: ஞாயிற்றுக்கிழமை வந்தாலே உங்கள் வீட்டில் காலையில் இட்லியும், மட்டன் குழம்பும் தான் செய்வீர்களா? அப்படி செய்யும் மட்டன் குழம்பை எப்போதும் ஒரே மாதிரியான சுவையில் தான் செய்வீர்களா? அதுவும் இதுவரை நீங்கள் மட்டன் குழம்பிற்கு மசாலாவை அரைத்து தான் செய்துள்ளீர்களா?
அப்படியானால் ஒருமுறை அதிகம் சிரமப்படாமல், மசாலா எதுவும் அரைக்காமல் எளிதில் மட்டன் குழம்பை செய்யுங்கள். இப்படி செய்யும் மட்டன் குழம்பு இட்லி, சாதம் என அனைத்துடனும் சேர்த்து சாப்பிடக்கூடியவாறு சுவையாக இருக்கும். முக்கியமாக டக்கென்று செய்யக்கூடியவாறு இருக்கும். குறிப்பாக இது பேச்சுலர்களும் செய்யக்கூடியவாறு ஈஸியாக இருக்கும்.

உங்களுக்கு மசாலா அரைக்காமல் மட்டன் குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மட்டன் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கிராம்பு - 3
* பட்டை - 1
* அன்னாசிப்பூ - 1
* ஏலக்காய் - 2
* சோம்பு - 1/2
* வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது)
* சின்ன வெங்காயம் - 3 கைப்பிடி (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* தயிர் - 100 மிலி
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* மட்டன் - 1 கிலோ
* மட்டன் மசாலா - 3 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் மட்டனை கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ, சோம்பு சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் சின்ன
வெங்காயத்தை சேர்த்து, பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, அத்துடன் பொடியாக
நறுக்கிய தக்காளியை சேர்த்து, மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் தயிரை சேர்த்து கிளறி, மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய்
தூள், மல்லித் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி
விட வேண்டும்.
* அடுத்து அதில் கழுவி வைத்துள்ள மட்டனை சேர்த்து 5 நிமிடம் கிளறி விட
வேண்டும்.
* மட்டனில் இருந்து நீர் விட்டு வந்ததும், அதில் மட்டன் மசாலாவை
சேர்த்து கிளறி, குழம்பிற்கு தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, கொதிக்க
ஆரம்பித்ததும் குக்கரை மூடி, 5-7 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும், குக்கரைத் திறந்து, மீண்டும் குக்கரை அடுப்பில்
வைத்து, குழம்பை 2-3 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லியைத்
தூவினால், சுவையான மட்டன் குழம்பு தயார்.



Click it and Unblock the Notifications