Latest Updates
-
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
மட்டன் சுக்கா
மட்டனைக் கொண்டு ஒரு சுவையான ரெசிபியை செய்ய ஆசைப்படுகிறீர்களா? அப்படியானால் மட்டன் சுக்கா செய்யுங்கள். இது வெள்ளை சாதம், ரசம் சாதம், சப்பாத்தி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
இந்த வார இறுதியில் நீங்கள் மட்டன் வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? அந்த மட்டனைக் கொண்டு ஒரு சுவையான ரெசிபியை செய்ய ஆசைப்படுகிறீர்களா? அப்படியானால் மட்டன் சுக்கா செய்யுங்கள். இந்த மட்டன் சுக்கா வெள்ளை சாதம், ரசம் சாதம், சப்பாத்தி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். பலருக்கு மட்டன் சுக்காவை வீட்டில் செய்து சாப்பிட ஆசை இருக்கும். ஆனால் அதை சரியாக செய்யத் தெரியாது.

உங்களுக்கு மட்டன் சுக்காவை எப்படி ஈஸியாக செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மட்டன் சுக்கா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மட்டன் - 500 கிலோ
* சீரகம் - 1 டீஸ்பூன்
* மிளகு - 2 டீஸ்பூன்
* மல்லி - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 4
* சின்ன வெங்காயம் - 150 கிராம் (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 4
* கறிவேப்பிலை - சிறிது
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் மட்டனுக்கு வேண்டிய மசாலாவை தயார் செய்து கொள்ள வேண்டும். அதற்கு மிக்சர் ஜாரில் மிளகு, வரமிளகாய், மல்லி ஆகியவற்றை ஒன்றாக எடுத்து நன்கு பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு குக்கரில் மட்டனை கழுவிப் போட்டு, அத்துடன் மஞ்சள் தூள், அரைத்த மசாலா பொடி, சுவைக்கேற்ப உப்பு மற்றும் 1/2 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, நன்கு கிளறி விட்டு குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். விசில் போனதும் குக்கரை திறக்க வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின்பு அதில் குக்கரில் உள்ள மட்டனை அப்படியே சேர்த்து, நீர் வற்றும் வரை நன்கு வேக வைத்து இறக்கினால், மட்டன் சுக்கா தயார்.
குறிப்பு:
* மட்டனை குக்கரில் வேக வைக்கும் போது அதிக நீரை ஊற்றிவிடாதீர்கள். ஏனெனில் ஏற்கனவே மட்டன் நீரை வெளியிடும்.
* மட்டன் ரெசிபிக்களுக்கு சின்ன வெங்காயத்தை பயன்படுத்தினால், அந்த ரெசிபியின் சுவை இன்னும் அற்புதமாக இருக்கும்.
* உங்களுக்கு இன்னும் காரமாக வேண்டுமானால், 2 டீஸ்பூன் மிளகாய் தூளை மட்டனை வேக வைக்கும் போது சேர்த்துக் கொள்ளலாம்.
* மட்டன் வேக நிறைய நேரம் எடுக்கும். எனவே அதை குக்கரில் வேக வைத்து எடுத்து பயன்படுத்துவது சற்று சுலபமாக இருக்கும்.
Image Courtesy: steffisrecipes



Click it and Unblock the Notifications
