Latest Updates
-
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்...
ஒருமுறை இந்த மாதிரி மட்டன் சுக்காவை செஞ்சு பாருங்க.. அடிக்கடி செய்வீங்க...
Mutton Chukka Recipe In Tamil: விடுமுறை நாட்களில் வாய்க்கு விருந்தளிக்கும் வகையில் நல்ல சுவையான அசைவ ரெசிபிக்களை சமைத்து சாப்பிடுவோம். இன்று உங்கள் வீட்டில் மட்டன் வாங்கியிருக்கீங்களா? அப்படியானால் அந்த மட்டனைக் கொண்டு வழக்கமாக செய்வது போன்று குழம்பு, கிரேவி, வறுவல் என்று செய்யாமல், சுக்கா செய்யுங்கள்.
அதுவும் வழக்கமாக நீங்கள் செய்யுமாறு செய்யாமல், கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு மட்டன் சுக்காவை செய்தால், வீடும் மணக்கும், குழந்தைகளும் பெரியவர்களும் விரும்பி சாப்பிடுமாறும் இருக்கும். முக்கியமாக இந்த மாதிரி சுக்கா செய்தால், ரசம் சாதத்துடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.

உங்களுக்கு மட்டன் சுக்காவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மட்டன் சுக்கா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
மட்டனை வேக வைப்பதற்கு..
* மட்டன் - 3/4 கிலோ
* தனி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 3/4 டம்ளர்
சுக்காவிற்கு...
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 2 துண்டு
* கிராம்பு - 4
* அன்னாசிப்பூ - 2
* பிரியாணி இலை - 2
* வரமிளகாய் - 2
* பூண்டு - 15 பல்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 100 கிராம் அல்லது பெரிய வெங்காயம் - 2 (பொடியாக
நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* உப்பு - தேவையான அளவு
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* குழம்பு மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் மட்டனை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் மட்டனை சேர்த்து, அத்துடன்
தனி மிளகாய் தூள், மஞ்சள் தூள், சுவைக்கேற்ப உப்பு மற்றும் 3/4 டம்ளர்
நீரை ஊற்றி கிளறி, குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள
வேண்டும்.
* விசில் போனதும், குக்கரைத் திறக்க வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, பிரியாணி
இலை, வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் 15 பூண்டு பற்கள் மற்றும் 1 டீஸ்பூன் சோம்பு
சேர்த்து அரைத்து, அதை வாணலியில் போட்டு நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நிறம் மாறும் வரை
வதக்க வேண்டும்.
* பின் அதில் கறிவேப்பிலை, சிறிது உப்பு சேர்த்து ஒருமுறை கிளறி,
இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போய்
நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து குக்கரில் உள்ள மட்டனை நீருடன் அப்படியே ஊற்றி, குழம்பு
மிளகாய் தூள் சேர்த்து கிளறி, 15 நிமிடம் மிதமான தீயில் வைத்து, நன்கு
வேக வைக்க வேண்டும்.
* உங்களுக்கு கிரேவி போன்று வேண்டுமானால், நீர் இருக்கும் போதே
இறக்கிவிடுங்கள். இல்லாவிட்டால், நீர் வற்றும் வரை வேக வைத்து
இறக்குங்கள். இறுதியாக கொத்தமல்லியைத் தூவி கிளறினால், சுவையான மட்டன்
சுக்கா தயார்.
Image Courtesy: Yummy Indian Kitchen



Click it and Unblock the Notifications











