Latest Updates
-
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்..
மட்டன்-ல ஒருவாட்டி இப்படி பட்டர் கிரேவி செய்யுங்க.. சாதம், சப்பாத்தி-ன்னு எல்லாத்துக்கும் அள்ளும்..
Mutton Butter Gravy Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி மட்டன் வாங்குவீர்களா? எப்போது மட்டன் வாங்கினாலும் ஒரே மாதிரி குழம்பு, கிரேவி என்று தான் செய்து சாப்பிடுவீர்களா? இப்படி ஒரே சுவையில் சாப்பிட்டு போரடித்துவிட்டதா? அப்படியானால் ஒருமுறை மட்டனைக் கொண்டு பட்டர் கிரேவி செய்யுங்கள்.
இந்த பட்டர் கிரேவி சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தி, இட்லி, தோசை போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். இந்த மட்டன் பட்டர் கிரேவி செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, மிகவும் ருசியாகவும் இருக்கும். ஒருமுறை இந்த கிரேவியை வீட்டில் செய்தால், பின் அடிக்கடி இந்த கிரேவியை செய்து தருமாறு கேட்பார்கள். முக்கியமாக இந்த கிரேவி பேச்சுலர்களும் செய்யக்கூடிய வகையில் சுவையாக இருக்கும்.

உங்களுக்கு மட்டன் பட்டர் கிரேவியை எப்படி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மட்டன் பட்டர் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மட்டன் - 1/2 கிலோ
* உப்பு - 1 ஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 சிட்டிகை
* மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* தக்காளி - 1 (அரைத்தது)
* சின்ன வெங்காயம் - 8 (அரைத்தது)
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 2 சிட்டிகை
* கறிவேப்பிலை - 2 கொத்து
* புதினா - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
* வெங்காயம் - 3
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது
செய்முறை:
* முதலில் மட்டனை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் கழுவிய மட்டனுடன் உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய்
தூள், காஷ்மீரி மிளகாய் தூள், கரம் மசாலா, மல்லித் தூள், வெண்ணெய்
சேர்த்து பிரட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் அரைத்த தக்காளி மற்றும் அரைத்த சின்ன வெங்காயத்தை
சேர்த்து பிரட்டி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் மற்றும்
வெண்ணெய் சேர்த்து சூடானதும், சீரகம், கறிவேப்பிலை, புதினா,
கொத்தமல்லி சேர்த்து வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய 3 பெரிய வெங்காயத்தை சேர்த்து,
சிறிது உப்பு சேர்த்து நன்கு கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் ஊற வைத்துள்ள மட்டனை சேர்த்து நன்கு கிளறி விட்டு,
1 நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.
* பின் அதில் சிறிது நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து, 5 விசில் விட்டு,
பின் 2 நிமிடம் குறைவான தீயில் வைத்து வேக வைத்து அடுப்பை அணைத்துவிட
வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் சிறிது கொத்தமல்லியைத்
தூவி கிளறினால், சுவையான மட்டன் பட்டர் கிரேவி தயார்.



Click it and Unblock the Notifications

