Latest Updates
-
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
மட்டன் மூளையை இப்படி ஒருவாட்டி மசாலா செய்யுங்க.. பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடுவாங்க..
Mutton Brain Masala Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோர் மட்டன் பிரியரா? மட்டனின் அனைத்து பகுதிகளையும் விரும்பி சாப்பிடுவார்களா? முக்கியமாக மட்டன் மூளை என்றால் பிடிக்குமா? ஆனால் உங்களுக்கு மட்டன் மூளை அவ்வளவு சிறப்பாக செய்ய வராதா?
அப்படியானால் மட்டன் மூளையை கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு மசாலா செய்யுங்கள். இந்த மட்டன் மூளை மசாலாவை சூடான ரசம் சாதத்துடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும். விடுமுறை நாட்களில் சிம்பிளாக சமையலை முடிக்க நினைத்தால், இந்த மட்டன் மூளை மசாலாவை செய்து ரசம் சாதத்துடன் சாப்பிடுங்கள்.

உங்களுக்கு நல்ல சுவையான மட்டன் மூளை மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மட்டன் மூளை மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வேக வைப்பதற்கு...
* மட்டன் மூளை - 4
* தண்ணீர் - தேவையான அளவு
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - 1 டீஸ்பூன்
மசாலா செய்வதற்கு...
* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* மிளகுத் தூள் - 2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நீரை ஊற்றி நன்கு
கொதிக்க வைக்க வேண்டும்.
* நீர் கொதித்ததும், அதில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து, ஆட்டு
மூளையை நீரில் கழுவி சேர்த்து 5 நிமிடம் வேக வைத்து இறக்க
வேண்டும்.
* பின் அந்த மூளையை வெளியே எடுத்து, அதில் உள்ள நரம்புகளை
நீக்கிவிட்டு, சற்று பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய்,
கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக
வதக்க வேண்டும்.
* பின்பு அதில் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள்,
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் அதில் சிறிது நீரை ஊற்றி, பச்சை வாசனை போக வேக வைக்க
வேண்டும்.
* பின்னர் அதில் வேக வைத்து சுத்தம் செய்து வைத்துள்ள ஆட்டு மூளையை
சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்பு அதில் மிளகுத் தூளை சேர்த்து நன்கு கிளறி, 1/4 கப் நீரை
ஊற்றி கிளறி, மூடி வைத்து 5 நிமிடம் மிதமான தீயில் வைத்து வேக வைத்து
இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான ஆட்டு மூளை மசாலா
தயார்.



Click it and Unblock the Notifications