Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
முட்டைக்கோஸ் இருந்தா.. மழை நேரத்துல இப்படியொரு பக்கோடா செஞ்சு சாப்பிடுங்க.. அள்ளும்...
Cabbage Pakoda Recipe In Tamil: தற்போது ஆங்காங்கு மழை பெய்து கொண்டிருக்கிறது. இப்படி மழை பெய்யும் போது நிறைய பேருக்கு சூடான காபி, டீயுடன் நன்கு மொறுமொறுவென்றும், சூடாகவும் ஏதாவது சாப்பிட தோன்றும். உங்கள் வீட்டில் இருப்பவர்களும் இப்படிப்பட்டவர்கள் தானா? எப்போது மழை பெய்தாலும் சாப்பிட ஏதாவது கேட்பார்களா?
அப்படியானால் அப்போது வழக்கமாக செய்யும் வெங்காய பக்கோடா அல்லது பஜ்ஜி அல்லது வடையை செய்து கொடுப்பதற்கு பதிலாக, வீட்டில் முட்டைக்கோஸ் இருந்தால், அதைக் கொண்டு பக்கோடா செய்து கொடுங்கள். இந்த முட்டைக்கோஸ் பக்கோடா மிகவும் சுவையானது மட்டுமின்றி, செய்வதற்கு மிகவும் சுலபமானதும் கூட.

உங்களுக்கு முட்டைக்கோஸ் பக்கோடாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டைக்கோஸ் பக்கோடா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* முட்டைக்கோஸ் - 250 கிராம் (நீளவாக்கில் மெல்லியதாக
நறுக்கியது)
* உப்பு - 1 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/2 டீஸ்பூன்
* அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
* சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
* கடலை மாவு - 1 1/2 கப்
* முந்திரி - 100 கிராம்
* பச்சை மிளகாய் -
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிய முட்டைக்கோஸை ஒரு
பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் உப்பு, மிளகுத் தூள், மஞ்சள் தூள், சீரகத் தூள்,
காஷ்மீரி மிளகாய் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், அரிசி மாவு, சோள மாவு,
கடலை மாவு சேர்த்து கைகளால் நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்பு அதில் கொஞ்சம் கொஞ்சமாக நீரை தெளித்து, உதிர்த்து விடும்
அளவில் ஓரளவு கெட்டியாக பிசைந்து கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், முந்திரி பருப்பை சேர்தது பொன்னிறமாக
ப்ரை செய்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதே எண்ணெயில் பிசைந்து வைத்துள்ள பக்கோடா மாவை உதிர்த்து
விட்டு, பொன்னிறமாக ப்ரை செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இதேப் போன்று மீதமுள்ள அனைத்து பக்கோடா மாவையும் ப்ரை செய்து
எடுத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து அதே எண்ணெயில் பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறி போட்டு ப்ரை
செய்து எடுத்து, பக்கோடாவுடன் சேர்க்க வேண்டும்.
* பின் அதில் கறிவேப்பிலை சேர்த்து ப்ரை செய்து எடுத்து, அதையும்
பக்கோடாவுடன் சேர்க்க வேண்டும்.
* இறுதியாக ஒரு பாத்திரத்தில் ப்ரை செய்த பக்கோடா, பச்சை மிளகாய்,
கறிவேப்பிலை, முந்திரி ஆகியவற்றை எடுத்து கிளறிவிட்டால், சுவையான
மற்றும் மொறுமொறுப்பான முட்டைக்கோஸ் பக்கோடா தயார்.



Click it and Unblock the Notifications