Latest Updates
-
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
முட்டைக்கோஸை எப்பவும் போல பொரியல் செய்யாம இந்த மாதிரி கூட்டு செய்யுங்க... சூப்பர் சைடிஷா இருக்கும்...!
Muttaikose Kootu Recipe in Tamil: சாதத்திற்கு குழம்பு வைப்பது எவ்வளவு குழப்பமானதோ அதேபோல என்ன சைடிஷ் செய்வது என்பதும் மிகவும் கடினமான ஒன்றாகும். மதியம் சிம்பிளா அதிகம் மெனக்கெடாம சமையலை முடிக்க நினைக்கிறீங்களா? உங்கள் வீட்டில் முட்டைக்கோஸ் உள்ளதா? அப்படியானால் அந்த முட்டைகோஸை வைத்து வழக்கமான பொரியல் செய்யாம இந்த மாதிரி சூப்பரான கூட்டு செய்யுங்கள். இதை குக்கரில் 10 நிமிடத்தில் எளிதாக செய்து விடலாம். இந்த பக்குவத்தில் முட்டைக்கோஸ் கூட்டு செய்யும் போது, அது சூடான சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடவும் அருமையாக இருக்கும்.
இந்த முட்டைக்கோஸ் கூட்டு செய்வதற்கு ஈஸியாக இருப்பதால், பேச்சுலர்களும் இதை செய்யலாம். முக்கியமாக இந்த கூட்டு நீங்கள் வழக்கமாக செய்வதை விட சற்று வித்தியாசமான சுவையில் இருப்பதால், முட்டைக்கோஸ் பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு முட்டைக்கோஸ் கூட்டு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டைக்கோஸ் கூட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- மெலிதாக நறுக்கிய முட்டைகோஸ் - 1/2 கப்
- நீளமாக நறுக்கிய பச்சை மிளகாய் - 3
- பொடியாக நறுக்கிய இஞ்சி - 1/2 அங்குல துண்டு
- பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2 டீஸ்பூன்
- துவரம் பருப்பு வேக வைத்தது - 3 டீஸ்புன்
- உப்பு - தேவையான அளவு
அரைக்க தேவையான பொருட்கள்:
- தேங்காய் துருவல் - 3 டீஸ்பூன்
- சீரகம் - 1/4 டீஸ்பூன்
- அரிசி மாவு - 1/4 டீஸ்பூன்
தாளிக்க தேவையான பொருட்கள்:
- கடுகு - தேவையான அளவு
- கடலை பருப்பு - 2 டீஸ்பூன்
- எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
- முதலில் மிக்சியில் அரைப்பதற்காக கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் அரைத்து தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.
- பின் குக்கரில் முட்டைக்கோஸ், பச்சை மிளகாய், வெங்காயம், துவரம் பருப்பு, இஞ்சி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து 1/2 கப் தண்ணீர் ஊற்றவும்.
- குக்கரை விசில் போட்டு மூடி ஒரு விசில் வரும் வரை வேகவைக்கவும். விசில் அடங்கியதும் குக்கரை திறந்து தனியாக வைக்கவும்.
- பின்னர் அரைத்து வைத்துள்ள தேங்காயை சேர்த்து மீண்டும் அடுப்பின் மேல் மிதமான தீயில் மூன்று நிமிடங்கள் அல்லது எல்லாம் ஒன்று சேர்ந்து வரும் வரை கொதிக்க விடவும். பின் அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும்.
- இறுதியாக கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கி கடுகு, கடலை பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்து முட்டைக்கோஸ் கூட்டின் மேல் ஊற்றவும்.
- சுவையான முட்டைக்கோஸ் கூட்டு ரெடி. இதை சாதத்தில் போட்டும் சாப்பிடலாம் அல்லது சப்பாத்தியுடன் வைத்தும் சாப்பிடலாம்.



Click it and Unblock the Notifications