Latest Updates
-
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்..
முட்டைக்கோஸை இந்த மாதிரி கர்நாடகா ஸ்டைலில் சட்னி அரைச்சு பாருங்க..இட்லி, தோசைக்கு செம சைடிஷா இருக்கும்...!
Muttaikose Chutney Recipe in Tamil: பெரும்பாலான வீடுகளில் காலை அல்லது இரவு உணவென்றால் அது இட்லி அல்லது தோசைதான். இட்லி, தோசைக்கு ஈஸியான சைடிஷ் என்றால் எப்போதும் முதலில் நினைவிற்கு வருவது சட்னிதான். சட்னியிலும் பெரும்பாலும் தேங்காய் சட்னி அல்லது கார சட்னி என ஒரே மாதிரியான சட்னிகளைத்தான் நாம் அரைப்போம். இது காலப்போக்கில் சலிப்பை ஏற்படுத்தும். வழக்கமான தேங்காய், தக்காளி மற்றும் மிளகாய் சட்னிக்குப் பதிலாக புதிய சட்னிகளை முயற்சிக்க விரும்புபவர்கள் காய்கறிகளில் சட்னி அரைக்க முயற்சிக்கலாம்.
காய்கறி சட்னி என்று வரும்போது பெரும்பாலும் கேரட், பீட்ரூட், வெள்ளரிக்காய் போன்றவற்றை வைத்துதான் சட்னி அரைப்போம். ஆனால் முட்டைக்கோஸை வைத்தும் சூப்பரான சட்னி செய்யலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? அதிலும் கர்நாடகா ஸ்டைலில் முட்டைக்கோஸ் சட்னி அரைக்கும் போது இட்லி, தோசை மட்டுமின்றி சாதத்துக்கும் அது அட்டகாசமான சைடிஷாக இருக்கும்.

உங்களுக்கு கர்நாடகா ஸ்டைல் முட்டைக்கோஸ் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கர்நாடகா ஸ்டைல் முட்டைக்கோஸ் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 2 கப் நறுக்கிய முட்டைக்கோஸ்
- 1 வெங்காயம்
- 1/2 டீஸ்பூன் துருவிய இஞ்சி
- 1 பச்சை மிளகாய்
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1 தக்காளி
- 2 வர மிளகாய்
- 2 டேபிள்ஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 1/4 டீஸ்பூன் கடுகு
- அரை ஸ்பூன் மஞ்சள் தூள்
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
தாளிக்க:
- 1 ஸ்பூன் எண்ணெய்
- 1 வர மிளகாய்
- 1/2 ஸ்பூன் கடுகு
- 1/2 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
- கறிவேப்பிலை சிறிதளவு
செய்முறை:
- முட்டைக்கோஸை நன்றாக கழுவி நறுக்கவும். வெங்காயம் மற்றும் தக்காளியையும் நறுக்கிக்கொள்ளவும்.
- ஒரு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். அதில் கடுகு, வர மிளகாய் மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்கவும். அவற்றை மிதமான தீயில் வறுக்கவும்.
- பருப்பு லேசாக பழுப்பு நிறமாகும் வரை வறுக்கவும். பின்னர் நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும். அவற்றை 2 நிமிடம் வதக்கவும்.
- அதன் பிறகு நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு மாறும் வரை வதக்கவும்.
- பின்னர் நறுக்கிய தக்காளியைச் சேர்க்கவும். தக்காளி குழையும் வரை மிதமான தீயில் வதக்கவும்.
- பின்னர் மஞ்சள் தூளை சேர்த்து வதக்கவும்.
- அதன் பிறகு நறுக்கிய முட்டைக்கோஸை சேர்த்து அடுப்பை புல்லாக வைத்து வேக வைக்கவும். அனைத்தையும் நன்றாக கலக்கவும்.
- ஒரு மூடி போட்டு முட்டைக்கோஸ் மென்மையாகும் வரை வேக வைக்கவும்.
- முட்டைக்கோஸ் வெந்ததும் அடுப்பை அணைத்து ஆற விடவும்.
- ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாருக்கு மாற்றி, நன்றாக அரைக்கவும். அரைக்கும்போது தனியாகத் தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை. மென்மையான விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- சட்னியை ஒரு கிண்ணத்திற்கு மாற்றவும். பின்னர் ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து பொரிய விடவும்.
- கடுகு பொரிந்ததும் அதில் ஒரு வர மிளகாய், கறிவேப்பிலை மற்றும் உளுந்தம் பருப்பு சேர்த்து தாளித்து சட்னி மீது கொட்டினால் சுவையான முட்டைக்கோஸ் சட்னி ரெடி.



Click it and Unblock the Notifications