Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
ஒருடைம் முட்டை வெச்சு இப்படி சால்னா செய்யுங்க.. இட்லி, தோசை, சப்பாத்திக்கு செம சூப்பரா இருக்கும்...
Egg White Salna Recipe In Tamil: நீங்கள் முட்டை பிரியரா? அடிக்கடி முட்டைகளை வீட்டில் செய்து சாப்பிடுவீர்களா?அதுவும் ஒரே மாதிரி தான் செய்து சாப்பிடுவீர்களா? அப்படியானால் ஒருமுறை வித்தியாசமான சுவையில் செய்து சாப்பிடுங்கள்.
அதுவும் சப்பாத்தி, இட்லி, தோசை என அனைத்துடனும் சேர்த்து சாப்பிடுமாறு, முட்டையைக் கொண்டு வெள்ளை சால்னா செய்யுங்கள். இது நிச்சயம் இதுவரை நீங்கள் சாப்பிடாத சுவையில் இருக்கும். இந்த சால்னாவை செய்வது மிகவும் சுலபம்.

உங்களுக்கு முட்டை வெள்ளை சால்னாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை வெள்ளை சால்னா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* முட்டை - 6
அரைப்பதற்கு...
* துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 1
* சோம்பு - 1 டீஸ்பூன்
* பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2
* முந்திரி - சிறிது
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 2 துண்டு
* கிராம்பு - 4
* கல்பாசி - சிறிது
* பிரியாணி இலை - 1
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் முட்டைகளை நீரில் போட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் தேங்காய், வெங்காயம், சோம்பு, பொட்டுக்கடலை,
சீரகம், மிளகு, பச்சை மிளகாய் மற்றும் முந்திரி சேர்த்து, சிறிது நீரை
ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பட்டை, கிராம்பு, கல்பாசி, பிரியாணி இலை சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி
பதத்திற்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து சிறது
நேரம் வதக்க வேண்டும்.
* அடுத்து அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து 2 நிமிடம் வதக்க
வேண்டும்.
* பின் அதில் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி
நன்கு 10 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து வேக வைத்த முட்டைகளை ஒவ்வொன்றாக எடுத்து,
இரண்டாக வெட்டி, கொதித்துக் கொண்டிருக்கும் சால்னாவில் சேர்த்து, 2
நிமிடம் கொதிக்க வைத்து, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான
முட்டை வெள்ளை சால்னா தயார்.



Click it and Unblock the Notifications