Latest Updates
-
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்..
வீட்டுல முட்டை இருக்கா? இந்த மாதிரி தொக்கு செய்யுங்க.. சாதம், சப்பாத்திக்கு பிரமாதமா இருக்கும்..
Muttai Thokku Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோர் முட்டைகளை விரும்பி சாப்பிடுவார்களா? அதனால் அடிக்கடி உங்கள் வீட்டில் முட்டைகளை செய்வீர்களா? அதுவும் எப்போதும் ஒரே மாதிரி தான் முட்டைகளை செய்து கொடுப்பீர்களா? இதுவரை நீங்கள் முட்டையைக் கொண்டு தொக்கு செய்துள்ளீர்களா? அப்படியானால் இன்று முட்டை தொக்கு செய்து கொடுங்கள்.
இந்த முட்டை தொக்கு சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தி, பூரி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இந்த முட்டை தொக்கு செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு முட்டை தொக்கு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை தொக்கு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கடலை எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* சோம்பு - 1/4 டீஸ்பூன்
* பட்டை - 1/4 இன்ச்
* கல்பாசி - 1 சிறிய துண்டு
* பிரியாணி இலை - 1
* கறிவேப்பிலை - சிறிது
* வெங்காயம் - 2 கப் (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 2 கப் (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - 1/2 இன்ச்
* பூண்டு - 6 பல்
* உப்பு - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* வேக வைத்த முட்டை - 4
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, சோம்பு, பட்டை, கிராம்பு, கல்பாசி, பிரியாணி இலை,
கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயம் மற்றும் சிறிது உப்பு தூவி, நன்கு
மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, பின்
தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகுத் தூள் மற்றும் கரம் மசாலா
சேர்த்து குறைவான தீயில் வைத்து, சுவைக்கேற்ப உப்பு மற்றும் சிறிது
நீரை தெளித்து விட்டு கிளறி, 15 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* அதற்குள் வேக வைத்த முட்டைகளை எடுத்து, அதன் நடுவே ஆங்காங்கு
கத்தியால் கீறி விட வேண்டும்.
* பின் மற்றொரு அடுப்பில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1
டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கீறி வைத்துள்ள முட்டைகள் மற்றும்
சிறிது கறிவேப்பிலையை சேர்த்து சில நிமிடங்கள் கிளறி விட
வேண்டும்.
* அதன் பின் அந்த முட்டைகளை வெந்து கொண்டிருக்கும் மசாலாவுடன்
சேர்த்து நன்கு கிளறி, மசாலா முட்டையுடன் நன்கு ஒன்று சேர்ந்ததும்,
அதை இறக்கினால், சுவையான முட்டை தொக்கு தயார்.
Image Courtesy: kannammacooks



Click it and Unblock the Notifications