Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
2 முட்டையும், 4 தக்காளியும் இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க..தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும்!
Muttai Thakkali Chutney Recipe in Tamil: பெரும்பாலான தமிழக வீடுகளில் வாரத்தில் குறைந்தது நான்கு நாளாவது அனைத்து வீடுகளிலும் இட்லி அல்லது தோசையை செய்து விடுவார்கள். சில வீடுகளில் தினமும் கூட இது இருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. இதனால் இட்லி, தோசை என்றாலே பலருக்கும் வெறுப்பு வந்து விடும். ஆனால் வித்தியாசமான சைடிஷ்களுடன் பரிமாறும் போது நிச்சயம் அது போரடிக்காது.
இட்லி, தோசைக்கு புதிய சைடிஷாக என்னதான் செய்வது? சைடிஷ்ஷை தேர்வு செய்வதே ஒரு பெரிய கவலையாக உள்ளதா? இந்த பிரச்சினையை தீர்க்கத்தான் தொடர்ந்து பல்வேறு சட்னி ரெசிபிக்கள் நமது தளத்தில் பகிரப்பட்டு வருகிறது. முட்டையை வைத்து நூற்றுக்கணக்கான ரெசிபிக்களை நாம் முயற்சித்திருப்போம், ஆனால் முட்டையை வைத்து இட்லி, தோசைக்கு சட்னி செய்து சாப்பிட்டிருக்கிறீர்களா?

1 முட்டையும், கொஞ்சம் தக்காளியும் இருந்தால் போதும் இட்லி, தோசைக்கு அட்டகாசமான ஒரு சட்னியை செய்யலாம். இந்த சூப்பரான சட்னியை சில நொடிகளில் தயாரித்து விடலாம் என்பது கூடுதல் சிறப்பு. உங்களுக்கு தக்காளி முட்டை சட்னி எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை தக்காளி சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையானப் பொருட்கள்:
- 4-5 பெரிய தக்காளி நறுக்கியது
- 1 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
- 2 கொத்து கறிவேப்பிலை
- 2 பல் பூண்டு பொடியாக நறுக்கியது
- ½ ஸ்பூன் கடுகு
- 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
- ½ ஸ்பூன் மிளகாய் தூள்
- 2 பச்சை மிளகாய் நீளவாக்கில் கீறியது
- 2 ஸ்பூன் எண்ணெய்
- உப்பு தேவையான அளவு
- ஒரு சிட்டிகை சர்க்கரை
- 2 முழு முட்டை
- சிறிதளவு கொத்தமல்லி
செய்முறை:
- முதலில் வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். அதேபோல பூண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி எண்ணெய் சூடானதும் கடுகு விதைகளை போட்டு பொரிய வைக்கவும்.
- பின்னர் நறுக்கிய பூண்டு மற்றும் வெங்காயத்தை சேர்த்து, பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும்.
- பின்னர் 2 கொத்து கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும், அதன்பின் கீறிய பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
- பின்னர் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்க்கவும். நெருப்பில் சுமார் 3-4 நிமிடங்கள் வதக்கி, தக்காளி நன்கு குலையும் வரை வதக்கவும்.
- பின்னர் தேவையான அளவு உப்பு, மஞ்சள் மற்றும் மிளகாய் தூள்
சேர்த்து வதக்கவும்.
- தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மசாலா பச்சை வாசனை போகும் வரை
வதக்கவும்.
- வாணலியை மூடி, சட்னி பதம் வரும் வரை மெதுவாக மிதமான தீயில் வேக வைக்கவும்.
- தக்காளி நன்கு குலைந்து வெந்ததும் 2 முட்டையை உடைத்து ஊற்றி விட்டு அடுப்பை அணைத்து விடவும் ,
- தக்காளியின் வெப்பத்திலேயே முட்டை வெந்து கிரீமி பதம் வரும் வரை நன்கு கலக்கவும்.
- தக்காளியும், முட்டையும் நன்கு ஒன்றாக கலந்த பிறகு கொத்தமல்லி தூவி இறக்கினால் சூப்பரான தக்காளி முட்டை சட்னி ரெடி.
- இது இட்லி, தோசை, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications