Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
4 முட்டை இருந்தா டக்குனு இந்த முட்டை புளிக்குழம்பை செய்யுங்க..சாதத்தில் பிசைந்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்!
Muttai Puli Kulambu Recipe in Tamil: இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி அல்லது பூரி செய்ய திட்டமிட்டிருக்கிறீர்களா? அதற்கு ஒரு அட்டகாசமான சைடிஷ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? அப்படியானால் வீட்டில் முட்டை இருந்தால், சுவையான ஸ்டைல் முட்டை புளிக்குழம்பை செய்து கொடுங்கள். சிக்கன் அல்லது மட்டன் வாங்க முடியாத போது இந்த ஸ்டைலில் முட்டை கிரேவியை செய்தால் அவற்றை விட இதுவே பெட்டராக இருக்கும். இந்த முட்டை கிரேவியை செய்வது மிகவும் சுலபம்.
இந்த முட்டை புளிக்குழம்பு சப்பாத்தி, பூரிக்கு மட்டுமின்றி சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். இந்த சூப்பரான முட்டைக் குழம்பை செய்வதற்கு ஸ்பெஷலான பொருட்கள் எதுவும் தேவையில்லை, ஆனால் அந்த பொருட்கள் நாம் எப்படி சேர்க்கிறோம் என்பதுதான் இந்த கிரேவியை ரொம்ப ஸ்பெஷலானதாக மாற்றுகிறது.

உங்களுக்கு முட்டை புளிக்குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காரசாரமான முட்டை புளிகுழம்பின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையானப் பொருட்கள்:
- 2 ஸ்பூன் கடலை எண்ணெய்
- 1/4 டீஸ்பூன் கடுகு
- 1/4 டீஸ்பூன் சீரகம்
- 2 வர மிளகாய்
- 2 கொத்து கறிவேப்பிலை
- 1 கப் நறுக்கிய வெங்காயம்
- 2 பச்சை மிளகாய்
- 1 டீஸ்பூன் நசுக்கிய பூண்டு
- 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
- 2 டீஸ்பூன் கொத்தமல்லி தூள்
- 1/4 டீஸ்பூன் பெருங்காயம்
- 2 நறுக்கிய தக்காளி
- தேவையான அளவு உப்பு
- 1 சிறிய புளித் துண்டு
- 1 கப் சூடான தண்ணீர்
- 1/2 கப் புதிய துருவிய தேங்காய்
- 1 கப் தண்ணீர்
- 4 வேகவைத்த முட்டைகள்
- ஒரு கைப்பிடி கொத்தமல்லி இலை
செய்முறை:
- ஒரு கப் வெந்நீரில் புளியை 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். பிழிந்து சாற்றை எடுத்து, விதைகள் மற்றும் நாரை அகற்றி புளிக்கரைசலை தனியாக எடுத்து வைக்கவும்.
- அரை கப் துருவிய தேங்காயை மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மென்மையான விழுதாக அரைக்கவும். இதையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் கடலை எண்ணெயை சூடாக்கி, கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்ததும் சீரகம், வர மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- பின்னர் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் நசுக்கிய பூண்டு சேர்க்கவும். வெங்காயம் மென்மையாகவும் லேசாக பொன்னிறமாகவும் மாறும் வரை வதக்கவும்.
- பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள் மற்றும் பெருங்காயம் சேர்த்து கிளறவும். மசாலாப் பொருட்கள் எண்ணெயில் சேரும் வரை சில வினாடிகள் வதக்கவும்.
- மசாலா பச்சை வாசனை போனதும் நறுக்கிய தக்காளி மற்றும் உப்பு சேர்க்கவும். தக்காளி மென்மையாகவும் குழைந்தும் போகும் வரை மிதமான தீயில் வேக வைக்கவும்.
- பின்னர் புளிக்கரைசலைச் சேர்த்து எல்லாவற்றையும் நன்றாகக் கலக்கவும். பாத்திரத்தை ஒரு மூடி போட்டு வைத்து, குழம்பை ஐந்து நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க விடவும்.
- குழம்பு நன்றாக கொதித்தவுடன் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க வைக்கவும்.
பின்னர் வேகவைத்த முட்டைகளைச் சேர்க்கவும். நன்றாகக் கலந்து, பாத்திரத்தை மூடி, குழம்பை மேலும் 5 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க விடவும்.
- இறுதியாக ஒரு கைப்பிடி கொத்தமல்லி இலைகளைத் தூவி அலங்கரித்து, சமையலை முடிக்கவும்.
- அவ்வளவுதான் சுவையான சுவையான முட்டை புளிக்குழம்பு ரெடி. இதை சூடான சாதத்தில் ஊற்றி பிசைந்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications