Latest Updates
-
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
4 முட்டையும், 4 முந்திரியும் இருந்தா இந்த முட்டை தொக்கை செஞ்சு பாருங்க..சப்பாத்தி, தோசைக்கு அருமையா இருக்கும்!
Muttai Masala Thokku Recipe in Tamil: புரட்டாசி மாதம் முடிந்து விட்டதால் உங்கள் வீட்டில் அடிக்கடி செய்ய தொடங்கி விட்டீர்களா? முட்டையை பொதுவாக ஆம்லெட், பொரியல் அல்லது பொடிமாஸ் செய்துதான் சாப்பிடுவோம். மிஞ்சிப்போனால் சாதம் அல்லது சப்பாத்திக்கு என்று வரும்போது முட்டையை வைத்து குருமாதான் செய்திருப்போம். இந்த முட்டை குருமாவை சாப்பிட்டு போரடித்திருந்தால் அடுத்தமுறை முட்டையை வைத்து இந்த அட்டகாசமான முட்டை தொக்கை செய்து பாருங்கள்.
இந்த முட்டை மசாலா தொக்கு சப்பாத்தி பூரியுடன் மட்டுமின்றி, சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அருமையாக இருக்கும். முக்கியமாக இந்த மசாலா செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதால், பேச்சுலர்களும் இதை ட்ரை செய்யலாம்.

உங்களுக்கு முட்டை மசாலா தொக்கை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை மசாலா தொக்கின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 4 முட்டை
- 1 பெரிய வெங்காயம்
- 1 பெரிய தக்காளி
- 4 முந்திரிப்பருப்பு
- 1/4 கப் துருவிய தேங்காய்
- 3 பட்டை துண்டு
- 3 கிராம்பு
- 2 ஸ்பூன் சோம்பு
- 1 துண்டு இஞ்சி
- 4 பூண்டு பல்
- 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
- 2 ஸ்பூன் கரம் மசாலா
- 1 ஸ்பூன் மல்லித் தூள்
- 2 ஏலக்காய்
- 1 டேபிள் ஸ்பூன் கசகசா
- ஒன்றரை ஸ்பூன் மிளகாய் தூள்
- கறிவேப்பிலை சிறிதளவு
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
- 1/2 எலுமிச்சம் பழம்
செய்முறை:
- முதலில் வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும், தேங்காயைத் துருவி வைத்துக் கொள்ளவும், இஞ்சி பூண்டை விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- முட்டையை வேக வைத்து உரித்து வைத்துக் கொள்ளவும் மற்றும் கசகசாவை சுமார் 10 நிமிடம் வரை ஊற வைக்கவும்.
- ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் சேர்த்து எண்ணெய்யை சுட வைக்கவும்.
- எண்ணெய் காய்ந்ததும் அதில் மஞ்சள் தூள், அரை மேஜைக்கரண்டி மிளகாய் தூள், மற்றும் கால் மேஜைக்கரண்டி கரம் மசாலா சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- பின்னர் அதில் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் முட்டைகளில் செங்குத்தாக கோடுகளைப் போட்டு சேர்த்து நன்கு முட்டை மசாலாவொடு ஒட்டுமாறு பிரட்டி விட்டு சுமார் ஒரு நிமிடம் வரை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சுட வைக்கவும்.
- எண்ணெய் சூடானதும் அதில் 2 துண்டு பட்டை, 2 கிராம்பு, மற்றும் ஒரு ஸ்பூன் சோம்பு சேர்த்து வதக்கவும்.
- அடுத்து அதில் சிறிதளவு கறிவேப்பிலை மற்றும் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை சேர்த்து வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.
- வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அரைத்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட் அதில் சேர்த்து அதனின் பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
- பின்னர் அதில் நறுக்கி வைத்திருக்கும் தக்காளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து தக்காளி நன்கு வதங்கும் வரை வதக்கவும்.
- தக்காளி நன்கு வதங்கியவுடன் அதில் மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் கரம் மசாலா, மற்றும் தனியா தூள் சேர்த்து சுமார் ஒரு நிமிடம் வரை வதக்கவும்.
- மசாலா பச்சை வாசனை போனதும் அதில் ஒரு கப் அளவு தண்ணீர் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து 2 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
- அதே நேரத்தில் மிக்ஸி ஜாரில் துருவி வைத்திருக்கும் தேங்காய், ஒரு துண்டு பட்டை, ஒரு ஸ்பூன் சோம்பு, ஊற வைத்திருக்கும் கசகசா, ஏலக்காய், மற்றும் முந்திரியை போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மென்மையான விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- இப்பொழுது இந்த அரைத்த தேங்காயை அடுப்பில் இருக்கும் மசாலாவுடன் சேர்த்து நன்கு கலந்து விட்டு சுமார் 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும்.
- 5 நிமிடத்திற்குப் பிறகு அதில் வறுத்தெடுத்து வைத்திருக்கும் முட்டையை சேர்த்து நன்கு கிளறி விட்டு சரியாக 2 நிமிடத்திற்கு பிறகு அதில் பிழிந்து வைத்திருக்கும் எலுமிச்சை சாறு, மற்றும் சிறிதளவு கொத்தமல்லியை சேர்த்து கிளறி தொக்கு பதத்திற்கு வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கவும்.
- சூப்பரான முட்டை மசாலா தொக்கு ரெடி. இது சப்பாத்தி, பூரி மற்றும் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications











