Latest Updates
-
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும்
கொளுத்தும் கோடையில் கிர்ணிப்பழத்தை இப்படி ஜூஸ் செஞ்சு குடிங்க.. உடல்சூடும் குறையும், உடனடி ஆற்றலும் கிடைக்கும்
Muskmelon Juice Recipe In Tamil: கோடைக்காலம் ஆரம்பித்து விட்டதால், வெயில் மண்டையை பிளக்கும் அளவில் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. வெளியே சிறிது நேரம் சென்றுவிட்டு வந்தாலே, நெருப்பிற்குள் சென்றுவிட்டு வந்தது போல் உடல் எரியத் தொடங்கும்.
மேலும் உடலிலும் ஆற்றல் இல்லாமல், சோர்து போய் இருக்க நேரிடும். ஆனால் கிர்ணிப்பழத்தை வெறுமனே சாப்பிடுவதை விட, ஜூஸ் போட்டு குடிப்பதன் மூலம், உடல் சூடும் குறையும், உடலின் மந்தநிலையும் குறைந்து, உடலின் ஆற்றலும் மேம்படும். முக்கியமாக இந்த ஜூஸ் செய்வது மிகவும் சுலபம்.

உங்களுக்கு கிர்ணிப்பழ ஜூஸை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கிர்ணிப்பழ ஜூஸ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மாவு ஜவ்வரிசி - 1/4 கப்
* பால் - 1/2 லிட்டர்
* சப்ஜா விதைகள் - 1/2 டேபிள் ஸ்பூன் (1/2 மணிநேரம் நீரில் ஊற
வைத்துக் கொள்ளவும்)
* வெண்ணிலா ப்ளேவர் கஸ்டர்டு பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
* நாட்டுச்சர்க்கரை - 3 1/2 டேபிள் ஸ்பூன்
* கிர்ணி பழம் - 1 (துண்டுகளாக்கப்பட்டது)
* பாதாம் - சிறிது (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் மாவு ஜவ்வரிசியை கழுவி விட்டு, 1 கப்
நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* 1/2 மணிநேரம் கழித்து, ஊற வைத்த ஜவ்வரிசியை அப்படியே அடுப்பில்
வைத்து வேக வைக்க வேண்டும்.
* மற்றொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, அதில் 1/2 லிட்டர் பாலை
ஊற்றி காய்ச்ச வேண்டும்.
* பால் சூடாவதற்குள், ஒரு கிண்ணத்தில் சப்ஜா விதைகளை 1/2 டேபிள்
ஸ்பூன் போட்டு, அதில் நீரை ஊற்றி 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் ஒரு பௌலில் வெண்ணிலா ப்ளேவர் கஸ்டர்டு பவுடரை 1 டேபிள் ஸ்பூன்
எடுத்து, சிறிது நீரை ஊற்றி கட்டிகளின் கரைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் அடுப்பில் உள்ள ஜவ்வரிசி வெந்துவிட்டதா என்று பார்த்து,
அதை இறக்கி, அதில் உள்ள நீரை வடிகட்டி எடுத்துவிட வேண்டும்.
* பின்பு பால் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் நாட்டுச்சர்க்கரையை
சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதில் கஸ்டர்டு கலவையை ஊற்றி கலந்து விட வேண்டும். 2
நிமிடம் நன்கு பால் கொதித்து சற்று கெட்டியாக ஆரம்பித்ததும், அதில்
ஜவ்வரிசியை சேர்த்து 4-5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி குளிர வைக்க
வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் கிர்ணிப்பழ துண்டுகளை எடுத்து நன்கு மென்மையாக
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பால் நன்கு குளிர்ந்த பின், அதில் அரைத்த கிர்ணிப்பழத்தை சேர்த்து,
அத்துடன் ஊற வைத்த சப்ஜா விதைகளை சேர்த்து நன்கு கிளறி
விடவேண்டும்.
* இறுதியாக நட்ஸை சேர்த்து கிளறி, ஐஸ் கட்டிகளை சேர்த்து கலந்து
பரிமாறினால், சுவையான கிர்ணிப்பழ ஜூஸ் தயார்.



Click it and Unblock the Notifications