Latest Updates
-
இன்றைய ராசிபலன் 26 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (26 July 2026-01 August 2026)- ஜூலை கடைசி வாரம் இந்த 6 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
சன்டே இப்படி சிக்கன் வறுவல் செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உங்க ராசியை சொல்லுங்க.. உங்களோட மிகப்பெரிய பலவீனம் என்னன்னு சொல்றோம்! -
சனி வக்ர பெயர்ச்சி: ஏழரை சனி நடக்கும் 3 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா? -
முள்ளங்கியை இந்த ஸ்டைலில் சாம்பார் செய்யுங்க, பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
இதய நோய் வரக்கூடாதா? அப்ப நைட் 8 மணிக்கு மேல் இந்த 6 பழக்கங்களை வெச்சுக்காதீங்க.. -
மெனோபாஸ் காலத்தில் பெண்களுக்கு டைப்-2 சர்க்கரை நோய் அபாயம் ஏன் அதிகரிக்கிறது? -
சனி-சூரியனால் உருவாகும் நவபஞ்ச திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்..
சப்பாத்திக்கு காளானை வைச்சு இந்த மாதிரி பாயா செஞ்சு பாருங்க... டேஸ்ட் அசத்தலா இருக்கும்...!
Mushroom Paya Recipe in Tamil: காளான் அசைவத்திற்கு இணையான சைவ மாற்று உணவு. இதுவும் பெரும்பாலானவர்கள் விரும்பி உண்ண கூடிய ஒன்று தான். இதை வைத்து பிரியாணி செய்திருப்போம், கிரேவி செய்திருப்போம். கடைகளில் வாங்கியோ அல்லது வீட்டில் சமைத்தோ பப்ஸ், காளான் சில்லி, காளான் மஞ்சூரியன் என சுவைத்திருப்போம்.
ஆனால் முற்றிலும் மாறுபட்ட சுவையில் காளான் பாயா செய்து பாருங்கள். தோசை, சப்பாத்தி மற்றும் பூரிக்கு இது சூப்பரான சைடிஷாக இருக்கும். வாங்க எப்படி செய்வது என இங்கு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
- காளான் - 200 கிராம்,
- பெரிய வெங்காயம் - 1
- தக்காளி - 1
- புதினா - 1 கைப்பிடி அளவு
- பச்சை மிளகாய் - 2
- இஞ்சி - சிறிதளவு(2 இன்ச் அளவு)
- பூண்டு - 12 அல்லது 15 பல்
- மிளகாய் தூள்- ¼ டீ ஸ்பூன்
- மஞ்சள் தூள் -¼ டீஸ்பூன்
- உப்பு -தேவையான அளவு
- கொத்தமல்லி - சிறிதளவு
அரைக்க:
- தேங்காய் - 1 மூடி
- முந்திரி - 10
- பாதாம் - 10
- சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்,
- கசகசா - 1 டீ ஸ்பூன்,
- மிளகு - ½ டீ ஸ்பூன்
- மிளகாய் தூள்- ½ டீ ஸ்பூன்
- மல்லித்தூள் - ½ டீ ஸ்பூன்
- சீரகத்தூள் - ¼ டீ ஸ்பூன்
- மட்டன் மசாலா - ½ டீ ஸ்பூன்
- மஞ்சள் தூள் -¼ டீஸ்பூன்
தாளிக்க:
- எண்ணெய் - தேவையான அளவு
- பட்டை - 2
- லவங்கம் - 2
- ஏலக்காய் - 2
- பிரியாணி இலை - 2
செய்முறை:
- முதலில் ஒரு சிறிய பாத்திரத்தில் முந்திரி, பாதம், சோம்பு, கசகசா
மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து ஊற விடவும்.
- தேங்காயை உங்கள் விருப்பப்படி துருவியோ அல்லது நறுக்கியோ எடுத்து
கொள்ளவும்.
- வெங்காயம் மற்றும் பூண்டை தோல் நீக்கி தண்ணீரில் கழுவி எடுத்து
கொள்ளவும்.
- இஞ்சியை மண் இல்லாமல் அலசி தோல் சீவி பொடியாக நறுக்கி
கொள்ளவும்.
- பின் இஞ்சி மற்றும் பூண்டை மிக்ஸி ஜாரில் சேர்த்து விழுதாக அரைத்து
கொள்ளவும்.
- காளானை சுத்தம் செய்து தண்ணீரில் அலசி நறுக்கி வைக்கவும்.
- தோல் உரித்து வைத்த வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லிய துண்டுகளாக
நறுக்கி கொள்ளவும்.
- நன்றாக பழுத்த சிவப்பு தக்காளியை கழுவி காம்பு பகுதியை நீக்கி
விட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைத்து கொள்ளவும்.
- ஒரு மிக்ஸி ஜாரில் ஊற வைத்த முந்திரி, சோம்பு, கசகசா, மற்றும் ஊற
வைத்த பாதாமின் தோல் நீக்கி சேர்க்கவும்.
- அதனுடன் துருவி வைத்த தேங்காயையும் சேர்த்து கொள்ளவும்.
- பின் அதில் மிளகு, மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மட்டன்
மசாலா, மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக அரைத்து வைத்து
கொள்ளவும்.
- பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்த்து காய
விடவும்.
- அதில் பட்டை, லவங்கம், ஏலக்காய், மற்றும் பிரியாணி இலை சேர்த்து
பொரிய விடவும்.
- பின் நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து
பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- நன்றாக வதக்கியதும் புதினா மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்த்து
கிளறவும்.
- அதனுடன அரைத்து வைத்த இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம்
போகும் வரை வதக்கி கொள்ளவும்.
- பின் அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மற்றும் தேவையான அளவு உப்பு
சேர்க்கவும்,
- நறுக்கிய தக்காளியை சேர்த்து குழைவாகும் வரை வேக விடவும்.
- அதனுடன் சுத்தம் செய்து வைத்த காளானை சேர்த்து கிளற அரை பதம் வரை
வேக விடவும்.
- பின் அதில் அரைத்து வைத்த மசாலா, தேவையான அளவு உப்பு மற்றும்
தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கினால் சுவையான காளான் பாயா
ரெடி!



Click it and Unblock the Notifications