Latest Updates
-
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
தோசை, சப்பாத்திக்கு காளானை இந்த மாதிரி மசாலா செஞ்சு பாருங்க... மட்டனை விட டேஸ்ட் சூப்பரா இருக்கும்...!
Mushroom Masala Fry Recipe in Tamil: காளான் பிரியரா நீங்கள் அல்லது உங்கள் வீட்டில் உள்ளோர் காளானை விரும்பி சாப்பிடுவார்களா? அடிக்கடி உங்கள் வீட்டில் காளானை வாங்கி செய்வீர்களா? அதிலும் இப்போது புரட்டாசி மாதமாக இருப்பதால் பெரும்பாலான வீடுகளில் சிக்கன், மட்டனுக்குப் பதிலாக காளான்தான் அதிகளவில் சமைக்கப்படுகிறது. அதனால்தான் என்னவோ காளானின் விலை கூட தற்போது அதிகரித்து விட்டது
காளானை ஒரே மாதிரி சமைத்து போர் அடித்துவிட்டதா? அப்படியானால் அடுத்த முறை மிகவும் எளிதாக மற்றும் விரைவாக செய்யக்கூடிய ஒரு சுவையான மற்றும் காரசாரமான காளான் பெப்பர் ப்ரை செய்யுங்கள். இது சாதம், சப்பாத்தி மற்றும் தோசை போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.

உங்களுக்கு காளான் பெப்பர் ப்ரையின் எளிய செய்முறையை தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காளான் பெப்பர் ப்ரை ரெசிபியை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- காளான் - 200 கிராம்
-மைதா மாவு - 3 டேபிள் ஸ்பூன்
- அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
- காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
-மிளகு தூள் - 1 டீஸ்பூன்
- கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
- இஞ்சி, பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
- எலுமிச்சம்பழ சாறு - 1 டேபிள் ஸ்பூன்
- பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 1
- பொடியாக நறுக்கிய பூண்டு - 10 பற்கள்
- பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
- கடுகு - 1 டீஸ்பூன்
- சோம்பு - 1 டீஸ்பூன்
- கறிவேப்பிலை - 1 கொத்து
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - தேவையான அளவு
- கொத்தமல்லி - 1 கைப்பிடி
செய்முறை:
- காளானை நன்றாக கழுவி துடைத்து சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். ஒரு சிறு பாத்திரத்தில் இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்த்தூள், மிளகுத் தூள், கரம்மசாலா தூள் மற்றும் எலுமிச்சை பழச்சாறு கலந்து நன்றாக பேஸ்ட்டை போல் செய்து கொள்ளவும்.
- சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துள்ள காளானை இந்த பாத்திரத்தில் உள்ள பேஸ்ட் கலவையில் சேர்த்து நன்றாக கிளறி 10 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
- பின்னர் மைதா மாவையும் மற்றும் அரிசி மாவையும் ஒன்றாக கலந்து வைத்துகொள்ள வேண்டும். இந்த மாவு கலவையை பாத்திரத்தில் உள்ள காளான் பேஸ்ட் கலவையின் மீது தூவி நன்றாக கலந்து கொள்ளவும்.
- இந்த கலவையில் தண்ணீர் சேர்க்கவே கூடாது. பின்னர் ஒரு கடாயில் பொறிக்க தேவையான அளவிலான எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் காளானை சிறிது சிறிதாக போட்டு பொரித்தெடுக்கவும்.
- காளானை பொன்னிறமாக வறுத்து எண்ணெய் வடியும் வரை ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.
- பின்னர் ஒரு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு நன்றாக வெடித்ததும், அதில் சோம்பு போட்டு நன்றாக 10 நொடிகள் வதக்கவும்.
- அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள பூண்டை சேர்த்து பொன்னிறமாகும் வரை இரண்டு நிமிடங்கள் வதக்கவும். பின்னர் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- பின்னர் அதில் பொடியாக நறுக்கிய வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
- பின்னர் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவைக்கவும் அதில் உப்பு மற்றும் பொறித்து வைத்துள்ள காளானை சேர்த்து நன்கு பிரட்டவும்.
- இறுதியாக 1 ஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து தொக்கு பதத்திற்கு வந்ததும் ஒரு கொத்து கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் சுவையான காளான் பெப்பர் ப்ரை ரெடி!



Click it and Unblock the Notifications