Latest Updates
-
வெண்டைக்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செய்யுங்க - டேஸ்ட் தரமா இருக்கும் -
1 வாரமானாலும் கொத்தமல்லி கெட்டுபோகக் கூடாதா? அப்ப இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க.. -
குழந்தை பெற்றுக்கொள்ள 52 லட்சம் போனஸ் கொடுக்கும் நாடு - எந்த நாடு? ஏன் கொடுக்கிறது தெரியுமா? -
மகம் நட்சத்திரத்தில் 3 கிரகங்களின் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
பாவக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. கசப்பே இருக்காது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. -
புதன் கன்னி ராசிக்கு செல்வதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும் அமைச்சர் செங்கோட்டையன்! இதன் ஆரோக்கிய நன்மைகளை பட்டியலிடும் டாக்டர்! -
1 கப் சுண்டல் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி சுக்கா செய்யுங்க - தோசை, சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து கன்னியில் உருவாகும் பத்ர மகாபுருஷ ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு அளவற்ற செல்வம் கிடைக்கும்! -
கீ போர்டுகளில் எழுத்துக்கள் ஏன் வரிசையாக இல்லாமல் மாறி மாறி உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
காளான் மக்கானி
உங்கள் வீட்டில் சப்பாத்தி, பூரி செய்யும் போது, அதற்கு ஒரு அசத்தலான சைடு டிஷ் செய்ய விரும்புகிறீர்களா? உங்கள் வீட்டில் காளான் உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு காளான் மக்கானி செய்யுங்கள்.
உங்கள் வீட்டில் சப்பாத்தி, பூரி செய்யும் போது, அதற்கு ஒரு அசத்தலான சைடு டிஷ் செய்ய விரும்புகிறீர்களா? உங்கள் வீட்டில் காளான் உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு காளான் மக்கானி செய்யுங்கள். இந்த ரெசிபியை வீட்டில் உள்ளோருக்கு ஸ்பெஷலாக ஏதாவது செய்து கொடுக்க நினைக்கும் போது செய்து தரலாம். இந்த காளான் மக்கானியை வீட்டிற்கு விருந்தினர்கள் வந்திருக்கும் போது செய்து கொடுத்தால், அவர்களின் பாராட்டைப் பெறலாம்.

உங்களுக்கு காளான் மக்கானி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காளான் மக்கானி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் + 1 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* தக்காளி - 4 (அரைத்தது)
* காஷ்மீரி மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* கரம் மசாலா - 2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன்
* க்ரீம் - 1/2 கப்
* கசூரி மெத்தி/காய்ந்த வெந்தயக் கீரை - 1 டேபிள் ஸ்பூன்
* காளான் - 200 கிராம் (நறுக்கியது)
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - ஒரு கையளவு
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து உருகியதும், சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயத்தைப் போட்டு, உப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, அரைத்த தக்காளியை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் மிளகாய் தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அதன் பின் காளனை சேர்த்து 10 நிமிடம் வேக வைத்து, தேவையான அளவு நீர், உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து கிளறி, குறைவான தீயில் வைத்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் அதில் கசூரி மெத்தி, க்ரீம், கரம் மசாலா மற்றும் கொத்தமல்லியைத் தூவி கிளறி 1 நிமிடம் கழித்து இறக்கி, மேலே வெண்ணெயை சேர்த்து கிளறினால், சுவையான காளான் மக்கானி தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications
