Latest Updates
-
பூர நட்சத்திரத்திற்குள் நுழையும் சூரியனால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
ரக்ஷா பந்தன் நாளில் உருவாகும் நவபஞ்ச யோகம்: இந்த 3 ராசிக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
Dengue: அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. எச்சரிக்கும் டாக்டர்! -
கொங்கணி ஸ்டைல் காராமணி மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாதம், சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
குடிமகன் ஒவ்வொருவரும் 9 கோடி சம்பாதிக்கும் உலகின் பணக்கார நாடு எது தெரியுமா? அமெரிக்கா இல்லை -
செப்டம்பர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் வாழ்வில் பிரகாசத்தை கொண்டு வரப்போகுது! -
பச்சை பயறு தோசையும், இஞ்சி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 27 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
கும்ப ராசியில் நிகழும் சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு மோசமா இருக்கும்.. உஷார்.. -
செவ்வாய்-குருபகவானின் அரிய சேர்க்கை இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அற்புதங்கள் நிகழப்போகுதாம்
காளான் பட்டர் மசாலா
இரவு நேரத்தில் சப்பாத்திக்கு ஒரு வித்தியாசமான சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அதிலும் சற்று க்ரீமியாக கிரேவி செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் காளான் பட்டர் மசாலா செய்யுங்கள்.
இரவு நேரத்தில் சப்பாத்திக்கு ஒரு வித்தியாசமான சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அதிலும் சற்று க்ரீமியாக கிரேவி செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் காளான் பட்டர் மசாலா செய்யுங்கள். இதுவரை நீங்கள் பன்னீர் பட்டர் மசாலாவைத் தான் கேட்டிருப்பீர்கள். காளான் பட்டர் மசாலா என்பது வேறொன்றும் இல்லை. இதில் பன்னீருக்கு பதிலாக காளானை சேர்க்க வேண்டும்.

முக்கியமாக இந்த காளான் பட்டர் மசாலா குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். இப்போது காளான் பட்டர் மசாலாவை எப்படி செய்வதென்று காண்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* காளான் - 200 கிராம் (நறுக்கியது)
* வெண்ணெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* காஷ்மீரி மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* பிரஷ் க்ரீம் - 1/4 கப்
* உலர்ந்த வெந்தய கீரை - 1 சிட்டிகை
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
அரைப்பதற்கு...
* தக்காளி - 2 (நறுக்கியது)
* முந்திரி - 5
செய்முறை:
* முதலில் மிக்ஸி ஜாரில் தக்காளி மற்றும் முந்திரி சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் வெண்ணெய் சேர்த்து காய்ந்ததும், சீரகத்தைப் போட்டு தாளிக்கவும்.
* பின்பு அதில் வெங்காயத்தைப் போட்டு வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
* அடுத்து அரைத்து வைத்துள்ள தக்காளி பேஸ்ட் சேர்த்து, பச்சை வாசனை போக குறைந்தது 5-7 நிமிடம் குறைவான தீயில் வேக வைக்கவும்.
* அதன்பின் காஷ்மீரி மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து, சிறிது நீர் ஊற்றி சில நிமிடம் கிளறி, பின் காளானை சேர்த்து நன்கு கிளறி, காளான் நீர் விட்டு வற்றும் வரை வேக வைக்கவும். வேண்டுமானால் காளான் இன்னும் சற்று வேக, அதில் சிறிது நீர் தெளித்து வேக வைக்கலாம்.
* நீர் முற்றிலும் வற்றிய பின், பிரஷ் க்ரீம் சேர்த்து கிளறி, உப்பு சுவை பார்த்து, எண்ணெய் மேலே மிதக்கும் வரை நன்கு வேக வைத்து, இறுதியில் காய்ந்த வெந்தய கீரையை கையால் நசுக்கி மேலே தூவி இறக்கினால், சுவையான காளான் பட்டர் மசாலா ரெடி!



Click it and Unblock the Notifications