Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
மொறுமொறுப்பான... காளான் 65
உங்கள் வீட்டில் காளான் உள்ளதா? உங்கள் குழந்தைகள் மாலை வேளையில் சாப்பிட ஏதாவது கேட்கிறார்களா? அப்படியானால் ஒரு கப் காபி/டீ போட்டு கொடுத்து, அத்துடன் காளானைக் கொண்டு 65 செய்து கொடுங்கள்.
உங்கள் வீட்டில் காளான் உள்ளதா? உங்கள் குழந்தைகள் மாலை வேளையில் சாப்பிட ஏதாவது கேட்கிறார்களா? அப்படியானால் ஒரு கப் காபி/டீ போட்டு கொடுத்து, அத்துடன் காளானைக் கொண்டு 65 செய்து கொடுங்கள். இந்த காளான் 65 மிகவும் சுவையாக இருப்பதோடு, செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும். மேலும் இதை வீட்டிற்கு விருந்தினர்கள் வந்திருக்கும் போது செய்து கொடுத்தால், அவர்களின் பாராட்டைப் பெறலாம்.

உங்களுக்கு காளான் 65 எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காளான் 65 ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* காளான் - 6-7
* சோள மாவு - 1/4 கப்
* பூண்டு - 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* சாட் மசாலா - 1/2 டீஸ்பூன்
* சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
* மைதா - 2 டேபிள் ஸ்பூன்
* வெஜிடேபிள் ஆயில் - பொரிப்பதற்கு தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது
* எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் காளானை நன்கு கழுவி, அதை 2-3 துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பௌலில் சோள மாவு, மைதா, இஞ்சி, பூண்டு, மிளகுத் தூள், மிளகாய் தூள், சீரகப் பொடி, சாட் மசாலா, சிறிது கேசரி பவுடர் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, தேவையான அளவு நீர் சேர்த்து கட்டிகளின்றி சற்று கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் எலுமிச்சை சாறு மற்றும் கொத்தமல்லி சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் காளான் துண்டுகளை போட்டு பிரட்ட வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், காளான் துண்டுகளைப் போட்டு பொரித்து எடுத்தால், சுவையான காளான் 65 தயார்.
Image Courtesy: evergreenrecipes



Click it and Unblock the Notifications
