Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
3 முருங்கைக்காய் இருந்தா.. இப்படி சுக்கா செய்யுங்க.. டேஸ்ட் டக்கரா இருக்கும்..
Murungakkai Sukka Recipe In Tamil: உங்கள் வீட்டில் முருங்கைக்காய் உள்ளதா? எப்போதும் முருங்கைக்காயைக் கொண்டு சாம்பார், புளிக்குழம்பு என்று தான் செய்வீர்களா? அப்படியானால் ஒருமுறை முருங்கைக்காய் இருந்தால், அதைக் கொண்டு சுக்கா செய்யுங்கள்.
இந்த முருங்கைக்காய் சுக்கா சாம்பார் சாதம், தயிர் சாதம், ரசம் சாதம் என்று அனைத்துடனும் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். மேலும் இந்த சுக்கா செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும். ஒருமுறை முருங்கைக்காயை இப்படி சுக்கா செய்தால், பின் வீட்டில் உள்ளோர் அடிக்கடி செய்ய சொல்லிக் கேட்பார்கள்.

உங்களுக்கு முருங்கைக்காய் சுக்கா ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முருங்கைக்காய் சுக்கா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நல்லெண்ணெய் - 3 ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* சின்ன வெங்காயம் - 15 (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 7-8 பல் (இடித்தது)
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* சாம்பார் தூள் - 1 டீஸ்பூன்
* முருங்கைக்காய் - 3 (நீளவாக்கில் நறுக்கியது)
* தண்ணீர் - 2 டம்ளர்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து,
பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பூண்டு பற்களை நன்க இடித்து சேர்த்து வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப
உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, தக்காளி மென்மையாகும் வரை
வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் மல்லித் தூள், மிளகாய் தூள், சாம்பார் தூள் சேர்த்து
மிதமான தீயில் வைத்து நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் நீளவாக்கில் நறுக்கிய முருங்கைக்காயை சேர்த்து
நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் அதில் 2 டம்ளர் நீரை ஊற்றி கிளறி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து
மூடி வைத்து 5 நிமிடம் வதக்க வேண்டும்.
* 5 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து கிளறி, பின் திறந்தவாக்கில்
நீர் வற்றும் வரை கிளறி விட்டு வேக வைத்து இறக்கி, கொத்தமல்லியைத்
தூவினால், சுவையான முருங்கைக்காய் சுக்கா தயார்.



Click it and Unblock the Notifications