Latest Updates
-
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா?
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்..
Murungakkai Biryani Recipe In Tamil: இதுவரை முருங்கைக்காய் வாங்கினால், அதைக் கொண்டு சாம்பார், புளிக்குழம்பு, வறுவல், மசாலா என்று பலவிதமான ரெசிபியை செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் அந்த முருங்கைக்காயைக் கொண்டு பிரியாணி செய்து சுவைத்துள்ளீர்களா? நீங்கள் பிரியாணி பிரியர் என்றால், நிச்சயம் இந்த முருங்கைக்காய் பிரியாணியை ஒருமுறை முயற்சித்துப் பாருங்கள். சற்று புதுமையான சுவையுடன் அருமையாக இருக்கும். குறிப்பாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு இந்த முருங்கைக்காய் பிரியாணியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முருங்கைக்காய் பிரியாணி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பாஸ்மதி அரிசி - 1 கப் (15 நிமிடம் ஊற வைத்தது)
ஊற வைப்பதற்கு...
* முருங்கைக்காய் - 2 (நீளத்துண்டுகளாக வெட்டியது)
* தயிர் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 2 துண்டு
* கிராம்பு - 4
* அன்னாசிப்பூ - 1
* ஏலக்காய் - 4
* கல்பாசி - சிறிது
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 2 (நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1
* புதினா - 1/2 கைப்பிடி
* கொத்தமல்லி - சிறிது
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* ஊற வைத்த முருங்கைக்காய்
* பிரியாணி மசாலா பவுடர் - 1 டீஸ்பூன்
* தக்காளி - 2 (நறுக்கியது)
* தேங்காய் பால் - 1 1/2 கப்
* ஊற வைத்த பாஸ்மதி அரிசி
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் பாஸ்மதி அரிசியை நீரில் 2 முறை கழுவி விட்டு, பின் நீரை
ஊற்றி 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு கிண்ணத்தில் துண்டுகளாக்கப்பட்ட முருங்கைக்காய், தயிர்,
மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு பிரட்டி,
மூடி வைத்து 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு ஒரு பிரியாணி பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய்
மற்றும் நெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், கல்பாசி,
அன்னாசிப்பூ, சோம்பு ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் மெல்லியதாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து,
பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கி, அத்துடன் புதினா,
கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் காஷ்மீரி மிளகாய் தூளை சேர்த்து நன்கு கிளறி, இஞ்சி
பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின்பு அதில் ஊற வைத்துள்ள முருங்கைக்காயை சேர்த்து நன்கு 3-4
நிமிடம் வதக்க வேண்டும்.
* பிறகு அதில் பிரியாணி மசாலா பவுடரை சேர்த்து கிளறி, அதன் பின்
நறுக்கிய தக்காளியை சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை வதக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் தேங்காய் பாலை சேர்த்து கிளறி, மூடி வைத்து கொதிக்க
வைக்க வேண்டும்.
* தேங்காய் பால் கொதித்ததும், அதில் பாஸ்மதி அரிசியை சேர்த்து கிளறி,
உப்பு சுவை பார்த்து, வேண்டுமானால் உப்பு சேர்த்து கிளறி, சிறிது
கொத்தமல்லியைத் தூவி கிளறி, மூடி வைத்து, குறைவான தீயில் வைத்து 10
நிமிடம் வேக வைத்து இறக்க வேண்டும்.
* பின் உடனே திறக்காமல், 10 நிமிடம் கழித்து பிரியாணியை கிளறினால்,
சுவையான முருங்கைக்காய் பிரியாணி தயார்.



Click it and Unblock the Notifications
