Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
ஒரு தடவ முருங்கைக்காயை இந்த மாதிரி பொரியல் செய்யுங்க.. அடிக்கடி செய்வீங்க...
Murungaikai Poriyal Recipe In Tamil: உங்கள் வீட்டில் முருங்கைக்காய் அதிகம் உள்ளதா? எப்போதும் முருங்கைக்காயைக் கொண்டு சாம்பார், புளிக்குழம்பு என்று செய்யாமல், ஒருமுறை முருங்கைக்காயைக் கொண்டு பொரியல் செய்யுங்கள்.
இந்த முருங்கைக்காய் பொரியல் சாம்பார் சாதம், தயிர் சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு சுலபமாக இருக்கும். மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும்.

உங்களுக்கு முருங்கைக்காய் பொரியலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முருங்கைக்காய் பொரியல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* தாளிப்பு வடகம் - சிறிது
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 10 பல்
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* குழம்பு மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* முருங்கைக்காய் - 2 (துண்டுகளாக்கப்பட்டது)
* தண்ணீர் - 2 டம்ளர்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், தாளிப்பு வடகத்தை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, வெங்காயம் மற்றும் பூண்டு
சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து,
நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மஞ்சள் தூள், குழம்பு மிளகாய் தூள், மிளகாய் தூள்
சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பிறகு அதில் துண்டுகளாக்கப்பட்ட முருங்கைக்காயை சேர்த்து 2 நிமிடம்
நன்கு வதக்கி விட வேண்டும்.
* பின் அதில் 2 டம்ளர் நீரை ஊற்றி கிளறி, நீர் வற்றும் வரை வேக வைத்து
இறக்கினால், சுவையான முருங்கைக்காய் பொரியல் தயார்.
Image Courtesy: Apoorvaa's Nalabagam



Click it and Unblock the Notifications