Latest Updates
-
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
ஆகஸ்ட் 17-ல் சூரியன் சிம்மம் ராசிக்கு செல்வதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
சனி-சுக்கிரன் இணைப்பால் உருவாகும் பிரதியுதி திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்கு அளவற்ற செல்வத்தை தரப்போகுது! -
சுதந்திர தினத்தின் போது ஏன் பிரதமர் செங்கோட்டையில் கொடியேற்றுகிறார் - அதற்குப்பின்னால் உள்ள வரலாறு என்ன? -
ஆடிப்பூரம் ஸ்பெஷல் அவல் பால் பொங்கல் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடுப்பி ஸ்டைல் வெண்டைக்காய் பொரியல் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும்
கத்தரிக்காயும், முருங்கைக்காயும் இருந்தா இப்படி செய்யுங்க.. குழம்பே தேவைப்படாது...
Murungaikai Kathirikai Thokku Recipe In Tamil: தினமும் மதியம் சாம்பார், புளிக்குழம்பு செய்து போரடித்துவிட்டதா? சிம்பிளாக அதே சமயம் சுவையான ஒரு சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் கத்திரிக்காயும், முருங்கைக்காயும் இருக்குதா?
அப்படியானால் அந்த காய்கறிகளைக் கொண்டு தொக்கு செய்யுங்கள். இந்த தொக்கு சாதத்துடன் பிரட்டி சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். மேலும் இது மதிய வேளையில் டக்கென்று செய்து முடிக்கும் வகையில் செய்வதற்கு ஈஸியாகவும் இருக்கும்.

உங்களுக்கு கத்திரிக்காய் முருங்கைக்காய் தொக்கு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கத்திரிக்காய் முருங்கைக்காய் தொக்கு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* பூண்டு - 12 பல்
* வெங்காயம் - 1
* தக்காளி - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து
* கத்திரிக்காய் - 3
* முருங்கைக்காய் - 1
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* குழம்பு மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 1 1/2 டம்ளர்
செய்முறை:
* முதலில் கத்திரிக்காய் மற்றும் முருங்கைக்காயை துண்டுகளாக்கி
நீரில் போட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு பூண்டு, வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து நன்கு
வதக்க வேண்டும்.
* பின் அதில் கத்திரிக்காய் மற்றும் முருங்கைக்காயை சேர்த்து, 5
நிமிடம் வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மஞ்சள் தூள் மற்றும் குழம்பு மிளகாய் தூள் சேர்த்து 2
நிமிடம் கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் சுவைக்கேற்ப உப்பு மற்றும் 1 1/2 டம்ளர் நீரை ஊற்றி
கிளறி, மூடி வைத்து 10 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, கிளறி விட்டு, நீர் அதிகம்
இருந்தால், ஓரளவு வற்றும் வரை நன்கு வேக வைத்து இறக்கினால், சுவையான
கத்திரிக்காய் முருங்கைக்காய் தொக்கு தயார்.
Image Courtesy: Apoorvaa's Nalabagam



Click it and Unblock the Notifications