Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
1 கைப்பிடி முருங்கைக்கீரையும், 3 வெங்காயமும் இருந்தா.. மழை நேரத்துல இப்படி போண்டா செஞ்சு சாப்பிடுங்க..
Murungai Keerai Bonda Recipe In Tamil: மழை நேரத்தில் காபி, டீ குடிக்கும் போது, நன்கு சூடாகவும், மொறுமொறுப்பாகவும் சாப்பிட வேண்டுமென்று தோன்றும். அதுவும் அப்போது வடை, பஜ்ஜி போன்றவற்றை சாப்பிட்டால் அருமையாக இருக்கும். எப்போதும் ஒரே மாதிரியான வடை, பஜ்ஜியை சாப்பிட்டு போரடித்துவிட்டதா?
அப்படியானால் வெங்காயமும், முருங்கைக்கீரையும் இருந்தால், அதைக் கொண்டு அருமையான சுவையில் போண்டா செய்யுங்கள். இந்த போண்டா சுவையாக இருப்பதோடு, சத்தானதும் கூட. முக்கியமாக இந்த போண்டாவை 10 நிமிடத்தில் செய்துவிடலாம்.

உங்களுக்கு முருங்கைக்கீரை வெங்காய போண்டாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முருங்கைக்கீரை வெங்காய போண்டா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பெரிய வெங்காயம் - 3
* முருங்கைக்கீரை - 1 கைப்பிடி
* கடலை மாவு - 3/4 கப்
* அரிசி மாவு - 1/4 கப்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* சோம்பு - 1/4 டீஸ்பூன்
* ஆப்ப சோடா - 1 சிட்டிகை
* தண்ணீர் - சிறிது
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் வெங்காயத்தை கேரட் சீவுவதில் சீவிக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பாத்திரத்தில் வெங்காயத்தை எடுத்துக் கொண்டு, அத்துடன் 1
கைப்பிடி முருங்கைக்கீரையை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் கடவை மாவு, அரிசி மாவு, மஞ்சள் தூள், மிளகாய் தூள்,
சுவைக்கேற்ப உப்பு ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
* பிறகு அதில் சோம்பை கையில் நன்கு நசுக்கி சேர்க்க வேண்டும்.
* அடுத்து அதில் ஆப்ப சோடா சேர்த்து, சிறிது உப்பு சேர்த்து போண்டா
மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு
தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், போண்டா மாவு கொஞ்சம் கொஞ்சமாக
எடுத்து உருட்டி, லேசாக தட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து
எடுத்தால், சுவையான முருங்கைக்கீரை வெங்காய போண்டா தயார்.



Click it and Unblock the Notifications