Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
முருங்கைக்கீரையை இப்படி சூப் செஞ்சு குடிங்க.. இரத்தம் நல்லா ஊறும்.. நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்..
Drumstick Leaves Soup Recipe In Tamil: மழை பெய்து கொண்டிருக்கிறது. உங்கள் வீட்டில் உள்ளோர் சளி, இருமலால் அவதிப்பட்டு கொண்டிருக்கிறார்களா? அப்படியானால் அவர்களுக்கு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் அடிக்கடி சூப் செய்து கொடுங்கள்.
அதுவும் வீட்டில் முருங்கைக்கீரை இருந்தால், அதைக் கொண்டு சூப் செய்யுங்கள். இந்த முருங்கைக்கீரை சூப் மாலை வேளையில் காபி, டீ-க்கு பதிலாக குடிக்க ஏற்றதாக இருக்கும். முக்கியமாக இந்த சூப் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமின்றி, உடலில் இரத்தத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.

உங்களுக்கு முருங்கைக்கீரை சூப் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முருங்கைக்கீரை சூப் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வெண்ணெய் - 2 டீஸ்பூன்
* பூண்டு - 7-8
* இஞ்சி - சிறிய துண்டு
* சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* முருங்கைக்கீரை - 2 கைப்பிடி
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் சேர்த்து
உருகியதும், பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும் பூண்டு பற்களை சேர்த்து
நன்கு வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து நிறம்
மாறும் வரை வதக்க வேண்டும்.
* பின் அதில் தக்காளியை சேர்த்து, மஞ்சள் தூள், சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து நன்கு தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கி, பின் அதில் மிளகுத்
தூள், சீரகத் தூள் சேர்த்து ஒருமுறை கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் சூப்பிற்கு தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, 10 நிமிடம்
நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக அதில் முருங்கைக்கீரையை 2 கைப்பிடி சேர்த்து 5 நிமிடம்
கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான முருங்கைக்கீரை சூப் தயார்.



Click it and Unblock the Notifications