Latest Updates
-
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்!
1 கைப்பிடி முருங்கைக்கீரை இருந்தா.. மதியம் இப்படி ரசம் வெச்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
Murungai Keerai Rasam Recipe In Tamil: உங்கள் வீட்டில் தினமும் ரசம் வைப்பீர்களா? அதுவும் எப்போதும் ஒரே சுவையில் தான் ரசம் வைப்பீர்களா? அப்படியே வித்தியாசமான ரசத்தை வைத்தாலும், தக்காளி ரசம், மிளகு ரசம், கொள்ளு ரசம் என்று வைத்திருப்பீர்கள். ஆனால் இரும்புச்சத்து அதிகம் நிறைந்த முருங்கைக்கீரை கொண்டு ரசம் வைத்துள்ளீர்களா? இல்லையென்றால் உடனே ட்ரை செய்யுங்கள்.
இந்த ரசத்தை வாரம் ஒருமுறை செய்து உட்கொண்டு வந்தால், இரும்புச்சத்து குறைபாடு இருந்தாலும் சரியாகும். அதுவும் மழைநேரத்தில் இந்த ரசத்தை செய்து உட்கொள்ளும் போது, நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து, உடல் வலிமையாக இருக்கும். முக்கியமாக இந்த ரசம் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு முருங்கைக்கீரை ரசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முருங்கைக்கீரை ரசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* துவரம் பருப்பு - 1/4 கப்
* தக்காளி - 3
* புளி - 1/2 நெல்லிக்காய் அளவு
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* முருங்கைக்கீரை - 1 கைப்பிடி
* மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 3
* பூண்டு - 5-7 பல்
* கொத்தமல்லி - சிறிது
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெருங்காயத் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் குக்கரில் துவரம் பருப்பை கழுவி சேர்த்து, அத்துடன்
நறுக்கிய 3 தக்காளி, பாதி நெல்லிக்காய் அளவு புளி, மஞ்சள் தூள்
சேர்த்து, 3/4 கப் நீரை ஊற்றி, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 4
விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, மத்து கொண்டு மசித்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் சிறிது நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, நீர்
நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் 1 கையளவு முருங்கைக்கீரையை
சேர்த்து கிளறி, 1 நிமிடம் வேக வைத்து இறக்கி, மூடி வைத்து, குளிர
வைக்க வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் அந்த முருங்கைக்கீரையை நீருடன் அப்படியே
சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மிளகு, சீரகம்,
வரமிளகாயை சேர்த்து நன்கு வறுத்து இறக்கி, இடி உரலில் போட்டு இடிக்க
வேண்டும்.
* பின்னர் அதில் பூண்டு பற்கள் மற்றும் கொத்தமல்லியை சேர்த்து நன்கு
இடித்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் மற்றும்
இடித்து வைத்துள்ளதை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் வேக வைத்து மசித்து வைத்துள்ள துவரம் பருப்பு
மற்றும் அரைத்த முருங்கைக்கீரையை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி
கலந்து, கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பை அணைத்துவிட்டால், சுவையான
முருங்கைக்கீரை ரசம் தயார்.



Click it and Unblock the Notifications