Latest Updates
-
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க..
சத்தான... முருங்கைக்கீரை கொள்ளு குழம்பு
Murungai Keerai Kollu Kuzhambu: தினமும் ஒரே காய்கறிகளைக் கொண்டு ஒரே மாதிரி சமைத்து சாப்பிட்டு போரடித்து விட்டதா? உங்கள் வீட்டில் முருங்கைக்கீரை உள்ளதா? அப்படியானால் அந்த முருங்கைக்கீரையுடன் கொள்ளு சேர்த்து குழம்பு செய்யுங்கள். இந்த முருங்கைக்கீரை கொள்ளு குழம்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.
வாரம் ஒருமுறை கீரையை உணவில் சேர்த்து வந்தால், உடல் ஆரோக்கியமாகவும் வலுவாகவும் இருக்கும். அதுவும் முருங்கைக்கீரையில் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால், அதை சேர்ப்பதன் மூலம், உடலில் இரத்த ஒட்டம் சிறப்பாக இருக்கும். மேலும் கொள்ளு உடலுக்கு வலு சேர்க்கும். இவ்விரண்டையும் கொண்டு குழம்பு செய்தால், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, உடல் ஆரோக்கியம் மேம்படும்.

உங்களுக்கு முருங்கைக்கீரை கொள்ளு குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முருங்கைக்கீரை கொள்ளு குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கொள்ளு - 1 கப் (நீரில் 3-4 மணிநேரம் ஊற வைத்தது)
* முருங்கைக்கீரை - 2 கப் (நறுக்கியது)
* புளிச்சாறு - 1 கப்
* சின்ன வெங்காயம் - 10
* தக்காளி - 2 (நறுக்கியது)
* சாம்பார் தூள் - 1 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* வெல்லம் - 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் கொள்ளுவை நீரில் 3-4 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள
வேண்டும். ஊற வைப்பதன் மூலம் கொள்ளு வேகமாக வெந்துவிடும்.
* பின்னர் ஒரு குக்கரை எடுத்து, அதில் முருங்கைக்கீரையைப் போட்டு,
அத்துடன் உப்பு, 2 டேபிள் ஸ்பூன் நீர் ஊற்றி, அடுப்பில் வைத்து,
குக்கரை மூடி 1 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் மற்றொரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானமும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் கொள்ளு, தக்காளி, புளிச்சாறு, உப்பு, வெல்லம், சாம்பார்
தூள், மிளகுத் தூள், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி, தேவையான
நீரை ஊற்றி, குக்கரை மூடி 6-8 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் வேக வைத்துள்ள
முருங்கைக்கீரையை சேர்த்து கிளறி, சுவை பார்த்து, வேண்டுமானால் உப்பு
சேர்த்து கிளறி, மீண்டும் அடுப்பில் வைத்து, நன்கு ஒரு கொதி விட்டு
இறக்க வேண்டும்.
* இறுதியாக ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு
கொடுத்துள்ள எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும், கடுகு, வெந்தயம்,
கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, குழம்புடன் சேர்த்து கிளறினால்,
சுவையான மற்றும் சத்தான முருங்கைக்கீரை கொள்ளு குழம்பு தயார்.
Image Courtesy: archanaskitchen



Click it and Unblock the Notifications