Latest Updates
-
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது? -
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா?
இட்லி, தோசைக்கு எப்பவும் ஒரே மாதிரி சைடு டிஷ் செய்யாம... ஒருமுறை முருங்கைக்கீரை வெச்சு இப்படி பண்ணுங்க..
Murungai Keerai Chutney Recipe In Tamil: இன்று காலை உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசை தான் செய்யப் போகிறீர்களா? இதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? எப்போதும் போல் ஒரே மாதிரியான சைடு டிஷ் செய்யாமல், உங்கள் வீட்டில் முருங்கைக்கீரை இருந்தால், அதைக் கொண்டு சட்னி செய்யுங்கள்.
இந்த முருங்கைக்கீரை சட்னியானது இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட பிரமாதமாக இருக்கும். மேலும் இது சத்தானதும் கூட. குழந்தைகளும் கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள். உங்களுக்கு முருங்கைக்கீரை சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முருங்கைக்கீரை சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* முருங்கைக்கீரை - 2 கப்
* பச்சை மிளகாய் - 3
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* புளி - 1 சிறிய துண்டு
* உப்பு - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
வறுப்பதற்கு...
* கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன்
* மல்லி விதை - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பூண்டு - 5 பல்
* பொட்டுக்கடலை - 1/2 கப்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு -1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* பெருங்காயத் தூள் - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடலைப் பருப்பு,
மல்லி விதை, சீரகம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்க வேண்டும்.
* பின் அதில் பூண்டு மற்றும் பொட்டுக்கடலை சேர்த்து நன்கு நிறம் மாற
வதக்கி இறக்கி ஒரு தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும்.
* பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், முருங்கைக்கீரை சேர்த்து நன்கு பச்சை வாசனை போக
வதக்கி இறக்கி, அதையும் குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து, அதன் பின் வதக்கிய
முருங்கைக்கீரையையும் சேர்க்க வேண்டும்.
* பின் அதில் பச்சை மிளகாய், துருவிய தேங்காய், புளி, உப்பு மற்றும்
சிறிது நீரை சேர்த்து நன்கு மென்மையாக அரைக்க வேண்டும்.
* பின்னர் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை,
பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்தால், சுவையான
முருங்கைக்கீரை சட்னி தயார்.
Image Courtesy: Akshaya.com



Click it and Unblock the Notifications