Latest Updates
-
பெண்களே! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. அது புற்றுநோயா இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்! -
4 முட்டை இருந்தா இப்படி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்குழம்பு செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இண்டர்நெட்டை கண்டுபிடித்தது யார்? இந்தியாவிற்கு இண்டர்நெட் எந்த வருடம் வந்தது தெரியுமா? -
அக்டோபரில் சிம்ம ராசிக்கு செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
ரவா குழிப்பணியாரமும்.. தேங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டங்கள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும்
அட்டகாசமான முந்திரி சிக்கன் ரெசிபி... செஞ்சு பாருங்க... 5 ஸ்டார் ஹோட்டல சாப்பிடுற மாதிரி இருக்கும்...!
Mundhiri Chicken Recipe in Tamil: பெரும்பாலான வீடுகளில் ஞாயிற்று கிழமை சிக்கன், மட்டன் மற்றும் மீன் போன்ற அசைவ உணவுகளை சமைப்பது வழக்கமான ஒன்றாக இருக்கும். சிக்கன் அடிக்கடி செய்யும் போது அதன் சுவை சில நேரத்தில் நமக்கு சலிப்பு தட்டிவிடும்.
அதை தவிர்க்க விதவிதமாக மாற்றி பொரிப்பது, கிரேவி செய்வது, வறுவல் செய்வது என பலவற்றை செய்வோம். அதன் வரிசையில் எப்படி சுவையான காஜூ சிக்கன் எனப்படும் முந்திரி சிக்கன் எப்படி செய்வது என இங்கு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
- முந்திரி - 75 கிராம்
- சிக்கன் - அரை கிலோ
- கடுகு - ½ டீ ஸ்பூன்
- உளுந்தம் பருப்பு - ¼ டீ ஸ்பூன்
- காய்ந்த மிளகாய் - 2
- பட்டை - 1
- கிராம்பு - 3
- ஏலக்காய் - 2
- வெங்காயம் - 1 (பெரியது)
- ஜாதி பத்திரி - 1
- இஞ்சி பூண்டு விழுது - 1 டீ ஸ்பூன்
- மஞ்சள் தூள் - ¼ டீ ஸ்பூன்
- மிளகாய்த் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
- மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
- கரம் மசாலா - ½ டீ ஸ்பூன்
- அன்னாசிப் பூ - 1
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
- பாதாம் - 1 டீ ஸ்பூன்
- கசகசா - 25 கிராம்
செய்முறை :
- ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து அதில் கசகசாவை சேர்த்து 30 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.
- பாதாம் பருப்பை ஊற வைத்து தோல் நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.
- பின் ஒரு பாத்திரத்தில் ஊற வைத்த கசகசா, பாதாம், முந்திரி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாதி பத்திரி, அன்னாசிப் பூ சேர்க்கவும்.
- அதை அடுப்பில் வைத்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து ஆற வைத்து விழுதாக அரைத்து கொள்ளவும்.
- பெரிய வெங்காயத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்கி வைக்கவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்க்கவும்.
- எண்ணெய் காய்ந்ததும் கடுகு சேர்த்து பொரிய விடவும். அதில் உளுந்தம் பருப்பு சேர்த்து நன்கு சிவக்கும் படி வறுக்கவும்.
- அதனுடன் காய்ந்த மிளகாய், பட்டை, கிராம்பு மற்றும் ஏலக்காய் சேர்த்து வறுக்கவும்.
- பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதன் பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
- அதில் சுத்தம் செய்து வைத்த சிக்கன் துண்டுகளை சேர்த்து 5 நிமிடங்களுக்கு வேக விடவும்.
- மல்லித் தூள், மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து ஐந்து முதல் பத்து நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.
- பின் அரைத்து வைத்த விழுதுடன் சிறிதளவு தண்ணீர் மற்றும் கரம் மசாலா சேர்த்து பத்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால் சுவையான காஜூ சிக்கன் ரெடி!



Click it and Unblock the Notifications
