Latest Updates
-
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்..
முள்ளங்கியை ஒருதடவை இந்த மாதிரி தொக்கு செஞ்சு பாருங்க... பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க...!
Mullangi Thokku Recipe in Tamil: தினமும் சாம்பார், புளிக்குழம்பு வைத்து போரடித்து விட்டதா? உங்கள் வீட்டில் முள்ளங்கி உள்ளதா? அப்படியானால் அந்த முள்ளங்கியை வைத்து தொக்கு செய்யுங்கள். இந்த முள்ளங்கி தொக்கு சப்பாத்தி, இட்லி, சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். மேலும் இந்த முள்ளங்கி தொக்கை செய்வது மிகவும் சுலபம். பேச்சுலர்கள் கூட இந்த முள்ளங்கி தொக்கு செய்யலாம். இந்த முள்ளங்கி தொக்கு சற்று குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் சுவையில் இருக்கும்.
பல மருத்துவ குணங்களைக் கொண்ட கொண்ட முள்ளங்கியை இந்த மாதிரி செய்து கொடுக்கும் போது முள்ளங்கி பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். முள்ளங்கியை அடிக்கடி உணவில் சேர்க்கும் போது இதயம் ஆரோக்கியமாக இருக்கும், செரிமானம் மேம்படும், எடை இழப்பிற்கு உதவும், எலும்புகளின் ஆரோக்கியம் மேம்படும், இரத்த சோகை சரியாகும்.

உங்களுக்கு முள்ளங்கியை வைத்து எப்படி தொக்கு செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முள்ளங்கி தொக்கு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- ஒன்றரை டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்
- 1/2 கப் நறுக்கிய சின்ன வெங்காயம்
- 1 கொத்து கறிவேப்பிலை
- 4 பூண்டு பல்
- 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- ஒன்றரை டீஸ்பூன் மிளகாய் தூள்
- 1 டீஸ்பூன் கொத்தமல்லி தூள்
- அரை ஸ்பூன் சோம்பு
- 1/2 கப் பொடியாக நறுக்கிய தக்காளி
- ஒன்றரை டீஸ்பூன் புளி விழுது
- தேவையான அளவு உப்பு
- கால் கிலோ முள்ளங்கி, நறுக்கியது
- 1 கப் தண்ணீர்
செய்முறை:
- முதலில் ஒரு கடாயில் நல்லெண்ணெயை ஊற்றி காய வைத்து கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்ததும் சோம்பு மற்றும் கறிவேப்பிலையைச் சேர்க்கவும்.
- பின்னர் நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் நறுக்கிய பூண்டை சேர்க்கவும். வெங்காயம் பொன்னிறமாகி கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்கவும்.
- பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் மல்லித் தூளை சேர்க்கவும். நன்றாக கிளறி மசாலா வாசனை போகும் வரை மிதமான தீயில் சமைக்கவும்.
- அடுத்து நறுக்கிய தக்காளியைச் சேர்த்து, தக்காளி குழையும் வரை சமைக்கவும்.
- தக்காளி நன்கு குழைந்ததும் புளிக்கரைசல் மற்றும் உப்பு சேர்க்கவும். நன்றாகக் கலக்கவும். முள்ளங்கி தொக்குக்கான மசாலா ரெடி.
- அடுத்த கட்டமாக நறுக்கிய முள்ளங்கியை கடாயில் சேர்த்து நன்கு கலக்கவும். மசாலா முள்ளங்கியில் நன்றாக சேரும்படி கிளற வேண்டும்.
- பின்னர் 1 கப் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
- முள்ளங்கி நன்றாக வெந்து தண்ணீர் சுண்டும் நிலைக்கு வரும் வரை மிதமான தீயில் முள்ளங்கியை வேக வைக்கவும்.
- முள்ளங்கி தொக்கு தயார். இதை சூடான சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடுங்கள்.



Click it and Unblock the Notifications
