Latest Updates
-
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்!
முள்ளங்கியை இந்த மாதிரி செஞ்சு கொடுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க...
Mullangi Masala Fry Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோர் முள்ளங்கி என்றாலே தலைதெறித்து ஓடுவார்களா? ஆனால் முள்ளங்கியை உணவில் சேர்ப்பதால் செரிமானம் மேம்படும், நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், கல்லீரல் மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது மற்றும் இரத்த சர்க்கரை சீராக இருக்கும். ஏனெனில் இதில் நார்ச்சத்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை ஏராளமான அளவில் உள்ளன.
இப்படிப்பட்ட முள்ளங்கியை கொண்டு பொதுவாக சாம்பார் தான் செய்வோம். ஆனால் முள்ளங்கியைக் கொண்டு மசாலா ப்ரை செய்தால், முள்ளங்கியின் வாசனை எதுவும் தெரியாது மற்றும் பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். எனவே அடுத்தமுறை முள்ளங்கி வாங்கினால், அதைக் கொண்டு முள்ளங்கி மசாலா வறுவலை செய்யுங்கள். இது சாம்பார், புளிக்குழம்பு போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.

உங்களுக்கு முள்ளங்கி மசாலா ப்ரையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முள்ளங்கி மசாலா ப்ரை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* முள்ளங்கி - 1/4 கிலோங
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது
அரைப்பதற்கு...
* தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 3
* இஞ்சி - 3 சிறிய துண்டு
* சீரகம் - 3/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் முள்ளங்கியை கழுவி, தோலை சீவி நீக்கிவிட வேண்டும்.
* பின் முள்ளங்கியை வட்டத் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் முள்ளங்கியை சேர்த்து,
அத்துடன் மஞ்சள் தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து சிறிது நீரை
ஊற்றி கிளறி, மூடி வைத்து முள்ளங்கியை நன்கு வேக வைக்க வேண்டும்.
* அதற்குள் மிக்சர் ஜாரில் தேங்காய், பச்சை மிளகாய், இஞ்சி, சீரகம்,
கறிவேப்பிலை மற்றும் சிறிது நீரை ஊற்றி, சட்னி பதத்திற்கு அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின் முள்ளங்கி வெந்ததும், அதை இறக்கி தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை,
வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்னர் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி
பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து,
அத்துடன் மஞ்சள் தூள், சிறிது உப்பு சேர்த்து, லேசாக நீரை ஊற்றி பச்சை
வாசனை போக நன்கு வேக வைக்க வேண்டும்.
* அடுத்து அதில் வேக வைத்துள்ள முள்ளங்கியை சேர்த்து கிளறி, மசாலா
முள்ளங்கியுடன் சேர 3-4 நிமிடம் நன்கு வேக வைத்து இறக்கி,
கொத்தமல்லியைத் தூவி கிளறினால், சுவையான முள்ளங்கி மசாலா ப்ரை
தயார்.



Click it and Unblock the Notifications