Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
முகலாய் ஸ்டைல் காளான் பட்டாணி கிரேவி செய்வது எப்படி?
அடிக்கடி ஒரே மாதிரி காளானை சமைக்க போரடிக்கிறதா? அப்படியானால் ஒருமுறை உங்கள் வீட்டில் உள்ளோருக்கு முகலாய் ஸ்டைல் காளான் பட்டாணி கிரேவியை செய்து கொடுங்கள். இந்த கிரேவி சாதத்திற்கு மட்டுமின்றி, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்ப
காளான் அசைவ உணவிற்கு இணையான சுவையைத் தரக்கூடிய உணவுப் பொருள். மேலும் இது பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு உணவுப் பொருளும் கூட. உங்கள் வீட்டில் உள்ளோர் காளானை அதிகம் விரும்பி சாப்பிடுவார்களா? நீங்களும் அடிக்கடி காளானை வீட்டில் சமைப்பீர்களா?
அடிக்கடி ஒரே மாதிரி காளானை சமைக்க போரடிக்கிறதா? அப்படியானால் ஒருமுறை உங்கள் வீட்டில் உள்ளோருக்கு முகலாய் ஸ்டைல் காளான் பட்டாணி கிரேவியை செய்து கொடுங்கள். இந்த கிரேவி சாதத்திற்கு மட்டுமின்றி, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக இது சற்று வித்தியாசமான சுவையுடன் க்ரீமியாக இருக்கும்.

உங்களுக்கு முகலாய் ஸ்டைல் காளான் பட்டாணி கிரேவி ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முகலாய் ஸ்டைல் காளான் பட்டாணி கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பச்சை பட்டாணி - 1/2 கப்
* காளான் - 400 கிராம்
* வெங்காயம் - 2 (நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* தக்காளி - 3 (அரைத்தது)
* முந்திரி - 6 (1 டேபிள் ஸ்பூன் பாலில் ஊற வைக்கவும்)
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* எண்ணெய் - 1 டீஸ்பூன் (காளான் வதக்குவதற்கு)
* எண்ணெய் - 1 டீஸ்பூன் (கிரேவிக்கு)
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், காளானை சேர்த்து, சிறிது உப்பு தூவி, 6-8 நிமிடம் வதக்கி இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் பச்சை பட்டாணியை குக்கரில் போட்டு, சிறிது நீரை ஊற்றி, அடுப்பில் வைத்து 1 விசில் விட்டு இறக்கி, அதையும் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* வெங்காயம் குளிர்ந்ததும், அதை மிக்ஸர் ஜாரில் போட்டு, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து பேஸ்ட் செய்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் முந்திரியை மிக்சர் ஜாரில் போட்டு பாலை ஊற்றி, அதையும் நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின் அதில் மிளகாய் தூள், சீரகத் தூள், மல்லித் தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்பு அதில் அரைத்த தக்காளி மற்றும் முந்திரி பேஸ்ட் சேர்த்து 3-4 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பிறகு அதில் அரைத்த வெங்காய பேஸ்ட் சேர்த்து நன்கு கிளறி, 2 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* அடுத்து அதில் வேக வைத்துள்ள காளான், பட்டாணியை சேர்த்து கிரேவிக்கு தேவையான நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, ஒரு கொதி விட்டு இறக்கினால், முகலாய் ஸ்டைல் காளான் பட்டாணி கிரேவி தயார்.
Image Courtesy: archanaskitchen



Click it and Unblock the Notifications