Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி மொஹல் ஸ்டைலில் பிரியாணி செஞ்சு பாருங்க.. எல்லாரும் அசந்து போயிருவாங்க...!
Mughal Chicken Biriyani Recipe in Tamil: சிக்கன் வைத்து கிரேவி செய்தாலும் சிலருக்கு சிக்கன் பிரியாணி தான் மிகவும் விருப்பமான ஒன்றாக இருக்கும். சிலர் ஆம்பூர், திண்டுக்கல் பிரியாணி என சில வகைகளை மட்டுமே விரும்பி சாப்பிடுவார்கள். சிலருக்கு அந்த பேதம் எல்லாம் இருக்காது.
பிரியாணி என்றாலே முயற்சி செய்து பார்க்கும் பிரியர்களாக இருப்பார்கள். அதில் நீங்களும் ஒருத்தரா? அப்போ இந்த வார ஸ்பெஷல் பிரயாணியா இந்த மொஹல் சிக்கன் பிரியாணி செய்து பாருங்க. வாங்க எப்படி செய்வது என பாக்கலாம்.

தேவையான பொருட்கள்:
- பெரிய வெங்காயம் - 4 (நீளவாக்கில் நறுக்கியது)
- தக்காளி - 4 (பொடியாக நறுக்கியது)
- சிக்கன் - 1 கிலோ
- இஞ்சி, பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன்
- தயிர் - 1 கப்
- மஞ்சள் தூள் - 1 டீ ஸ்பூன்
- மிளகாய் தூள் - 2 டீ ஸ்பூன்
- பச்சை மிளகாய் - 6 அல்லது 8
- பிரியாணி இலை - 1
- அன்னாசி பூ - 2
- ஏலக்காய் - 6
- கிராம்பு - 3
- ஷாஜீரா - 2 டீ ஸ்பூன்
- தனியாதூள் - 1 டீ ஸ்பூன்
- சோம்புத்தூள் - 1 டீ ஸ்பூன்
- சீரகத்தூள் - 1 டீ ஸ்பூன்
- கரம் மசலாத்தூள் - 2 டீ ஸ்பூன்
- கொத்தமல்லி - 2 கைப்பிடி
- புதினா - 2 கைப்பிடி
- முந்திரி, திராச்சை - தேவையான அளவு
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - தேவையான அளவு
- நெய் - தேவையான அளவு
- பாஸ்மதி அரிசி - 1 கிலோ
- எலுமிச்சை - 1
- குங்குமப்பூ - சிறிதளவு
செய்முறை:
- ஒரு பாத்திரத்தில் கழுவி சுத்தம் செய்த சிக்கன், தயிர், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள், நறுக்கிய பச்சை மிளகாய், பிரியாணி இலை, அன்னாசி பூ, தனியாதூள், சோம்புத்தூள், சீரகத்தூள், கரம் மசலாத்தூள், கொத்தமல்லி, மற்றும் புதினா என அனைத்தைத்தையும் மேலே சொன்ன அளவில் பாதி சேர்த்து கொள்ளவும்.
- அதனுடன் 2 ஏலக்காய், 1 கிராம்பு, ½ டீ ஸ்பூன் ஷாஜீரா, மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறி குறைந்தது அரை மணிநேரம் ஊற வைக்கவும்.
- பாஸ்மதி அரிசியினையும் கழுவி சுத்தம் செய்து 20 நிமிடம் ஊற
வைக்கவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து
காய்ந்ததும் நறுக்கி வைத்த வெங்காயத்தில் கால் பகுதியை சேர்த்து
பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
- அதே எண்ணெயில் முந்திரி மற்றும் உலர் திராட்சை சேர்த்து நன்கு சிவக்கும் படி வறுத்து எடுத்து கொள்ளவும்.
- அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் பொறித்ததில் மீதம் இருக்கும் எண்ணெயை ஊற்றவும்.
- தேவைப்பட்டால் மீண்டும் சிறிது எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து கொள்ளவும்.
- காய்ந்ததும் தாளிப்பு பொருட்களை போட்டு தாளிக்கவும்.
- பின் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
- அதனுடன் தயிர், மிளகாய்த்தூள், தக்காளி, கொத்தமல்லி, மற்றும் புதினா போட்டு வதக்கவும்.
- நன்றாக வதங்கியதும் ஊற வைத்த சிக்கன் கலவையினை போட்டு நன்றாக கிளறி மூடி போட்டு வேகவிடவும்.
- மற்றொரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் பிரியாணி இலை, அன்னாசி பூ, பச்சை மிளகாய், ஏலக்காய், கிராம்பு, ஷாஜீரா, கொத்தமல்லி, புதினா மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு தண்ணீரை சூடு பண்ணவும்.
- கொதி வந்ததும் ஊற வைத்த அரிசியினை சேர்த்து ½ பதம் வெந்ததும் தண்ணீரை வடித்து வைக்கவும்.
- சிக்கன் பாதி வெந்ததும் அதன் மேல் சாதத்தை சேர்க்கவும்.
- அதனுடன் எலுமிச்சை பழ சாறு சேர்க்கவும்.
- பின் வறுத்து வைத்த வெங்காயம், மற்றும் முந்திரி திராட்சை சேர்க்கவும்.
- பாத்திரத்தை இருக்கமாக மூடி அடுப்பை சிம்மில் வைத்து 20 நிமிடம் தம் போடவும்.
- கடைசியாக இறக்கி 2 ஸ்பூன் நெய் சேர்த்து கரண்டியின் பின் பகுதியால் மென்மையாக கிளறினால் கமகமக்கும் மொஹல் பிரியாணி ரெடி!



Click it and Unblock the Notifications