Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
மொச்சைக்கொட்டை வாங்குனா இந்த மாதிரி கூட்டு செஞ்சு பாருங்க... சூப்பரான சைடிஷா இருக்கும்...!
Mochai Kootu Recipe in Tamil: மொச்சைக்கொட்டை பெரும்பாலான மக்களுக்கு பிடித்த ஆரோக்கியமான மற்றும் சுவையான பொருளாகும். மொச்சைக்கொட்டையை வைத்து புளிக்குழம்பு, கருவாட்டுக் குழம்பு மற்றும் காரக் குழம்பு பல வகையான கிரேவிகளை செய்யலாம். பொதுவாக மொச்சைக்கொட்டையை வைத்து குழம்பு மட்டும்தான் செய்யலாம் என்று நாம் நினைத்திருப்போம். ஆனால் உண்மையில் மொச்சைக்கொட்டையை வைத்து பல சுவையான உணவுகளை செய்யலாம்.
அப்படி மொச்சைக்கொட்டையை வைத்து செய்யக்கூடிய சுவையான சைடிஷ்களில் ஒன்றுதான் மொச்சைக்கொட்டை கூட்டு. செய்வதற்கு மிகவும் எளிதானதாக இருக்கும் இந்த கூட்டு ஆரோக்கியமானதாகவும், சுவையானதாகவும் இருக்கும். உங்களுக்கு மொச்சைக்கொட்டை கூட்டு எப்படி செய்வதென்று தெரியாதா?

அப்படியானால் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் இந்த பதிவில் மிகவும் ஈஸியான, அதே சமயம் மிகுந்த சுவையுடன் இருக்கும் மொச்சைக் கூட்டை எப்படி செய்வதென்று பகிர்ந்துள்ளோம். அதைப் படித்து செய்து பார்த்து எப்படி இருந்தது என்று எங்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையானப் பொருட்கள்:
- மொச்சை - 100 கிராம்
- சாம்பார் பொடி - 1/2 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
அரைக்க:
- தேங்காய் துருவல் - 3 ஸ்பூன்
- சின்ன வெங்காயம் - 4
- தக்காளி - 1 சிறியது
தாளிக்க:
- எண்ணெய் - 3 ஸ்பூன்
- கடுகு - 1 ஸ்பூன்
- உளுந்தம் பருப்பு - 1/2 ஸ்பூன்
- பெரிய வெங்காயம் - 1
- கறிவேப்பிலை - ஒரு கொத்து
செய்முறை:
- மொச்சைக்கொட்டையை 6 மணி நேரம் வரை ஊற வைக்கவும். வெங்காயத்தை பொடிதாக நறுக்கிக் கொள்ளவும்.
- சின்ன வெங்காயம், துருவிய தேங்காய் மற்றும் நறுக்கிய தக்காளி சேர்த்து மென்மையான பேஸ்டாக அரைத்துக் கொள்ளவும்.
- ஊற வைத்த மொச்சைக் கொட்டையை நன்றாக கழுவி குக்கரில் போட்டு அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும். நீராவி வந்ததும் விசில் போட்டு 4 விசில் வந்தததும் இறக்கி வைக்கவும்.
- 5 நிமிடங்கள் கழித்து மூடியைத் திறந்து தண்ணீரை நன்கு வடித்து வைத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, உளுந்தம் பருப்பு மற்றும் வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்.
- வெங்காயம் நன்கு பொன்னிறமானதும் வேக வைத்த மொச்சைக்கொட்டையைப் போட்டு, சாம்பார் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து ஒரு நிமிடம் கிளறி தேவையான அளவு தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.
- மசாலா பச்சை வாசனை போனதும் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து கொதிக்க விடவும். கூட்டு நன்றாக கெட்டியானதும் இறக்கி விடவும்.
- சூப்பரான மொச்சைக்கொட்டை கூட்டு ரெடி!



Click it and Unblock the Notifications