Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
தக்காளியுடன் இந்த ஒரு பொருளை சேர்த்து சட்னி செஞ்சு பாருங்க.. அப்புறம் எப்பவும் இப்படி தான் சட்னி செய்வீங்க..
Mint Tomato Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி செய்யப் போகிறிர்களா? இட்லிக்கு சப்பென்று சைடு டிஷ் செய்வதை விட சற்று புளிப்பாக சைடு டிஷ் இருந்தால், 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடலாம். எனவே தக்காளி சட்னி தான் இட்லிக்கு எப்போதுமே பெஸ்ட். அதுவும் வழக்கமாக செய்யும் தக்காளி சட்னியை விட, சட்னி அரைக்கும் போது அத்துடன் 2 கைப்பிடி புதினாவை சேர்க்கும் போது, சுவை இன்னும் அட்டகாசமாக இருக்கும்.
முக்கியமாக இந்த சட்னி செய்வதற்கு ஈஸியாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கேட்டு விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். அதோடு இந்த சட்னி வேலைக்கு செல்பவர்கள் சட்டென்று செய்யக்கூடிய வகையில் சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு புதினா தக்காளி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே புதினா தக்காளி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 4
* வெங்காயம் - 4 (பொடியாக நறுக்கியது)
* பெரிய தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* புதினா - 2 கைப்பிடி
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், வரமிளகாய் சேர்த்து, வரமிளகாய் பலூன் போன்று வீங்கி வரும்
வரை வறுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் தககாளியை சேர்த்து, மென்மையாகும் வரை வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் 2 கைப்பிடி புதினாவை சேர்த்து 1 நிமிடம் வதக்கி
இறக்கி, குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை போட்டு, சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து, சற்று கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு 1
டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு,
கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால்,
சுவையான புதினா தக்காளி சட்னி தயார்.
Image Courtesy: Apoorvaa's Nalabagam



Click it and Unblock the Notifications