Latest Updates
-
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!
புதினா தொக்கு
இன்று இரவு உங்கள் வீட்டில் இட்லி, தோசை செய்யப் போகிறீர்களா? உடலுக்கு குளிர்ச்சியைத் தரும், அதே வேளையில் சுவையான ஒரு சைடு டிஷ் செய்ய வேண்டுமா? வீட்டில் புதினா இருந்தால், அதைக் கொண்டு புதினா தொக்கு செய்யுங்கள்.
இன்று இரவு உங்கள் வீட்டில் இட்லி, தோசை செய்யப் போகிறீர்களா? உடலுக்கு குளிர்ச்சியைத் தரும், அதே வேளையில் சுவையான ஒரு சைடு டிஷ் செய்ய வேண்டுமா? வீட்டில் புதினா இருந்தால், அதைக் கொண்டு புதினா தொக்கு செய்யுங்கள். இந்த புதினா தொக்கு இட்லி, தோசைக்கு மட்டுமின்றி, சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக இந்த தொக்கு குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும்.

உங்களுக்கு புதினா தொக்கு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே புதினா தொக்கு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* புதினா - 2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* சர்க்கரை - 1 டீஸ்பூன்
வறுத்து அரைப்பதற்கு...
* துவரம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 2
* தேங்காய் - 1/2 கப்
* பூண்டு - 1 பல்
* புளி - 1 சிறிய துண்டு
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் புளியைத் தவிர வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்து 3-4 நிமிடம் வறுக்க வேண்டும்.
* பின் அதில் புதினா இலைகளை சேர்த்து சுருங்கும் வரை வதக்கி, புளியை சேர்த்து ஒருமுறை கிளறி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்கள் அனைத்தையும் சேர்த்து, உப்பு மற்றும் சர்க்கரை சேர்க்க வேண்டும்.
* அதன் பின் சிறிது நீர் ஊற்றி நன்கு அரைத்தால், சுவையான புதினா தொக்கு தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications
