Latest Updates
-
ஆந்திரா ஸ்டைல் கோங்குரா புளியோதரை ரெசிபி - இந்த மாதிரி புளி சாதம் செஞ்சு பாருங்க -வித்தியாசமா செமையா இருக்கும் -
தங்கம் ஏன் மஞ்சள் நிறத்தில் மட்டும் இருக்கிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சுக்ராதித்ய யோகத்தால் இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்.. பண மழை கொட்டும்.. -
கம்பு ரொட்டியும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
அக்டோபர் 22, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணும் - ஜாக்கிரதை -
12 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசியில் உருவாகும் குரு மங்கள யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
நவராத்திரிக்கு பின் உருவாகும் இரட்டை ராஜயோகத்தால் ஜெயிக்கிற குதிரையாக போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
ஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - ஆரோக்கியமா சூப்பரா இருக்கும் -
வாஸ்துப்படி அதிர்ஷ்டத்தை ஈர்க்க இந்த ஓவியங்களை வாங்கி வீட்டுல வையுங்க.. பண கஷ்டமே வராது! -
ஆயுத பூஜைக்கு வாங்குன பொரியும், 2 முட்டையும் இருந்தா.. நைட் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. அள்ளும்..
புதினா சட்னியுடன் இந்த ஒரு பொருளை சேத்துக்கிட்டா.. சட்னி இன்னும் செம ருசியா இருக்கும்...
Mint Peanut Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசை தான் செய்யப் போகிறீர்களா? இதற்கு அட்டகாசமான ஒரு சட்னியை செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் புதினா உள்ளதா? அப்படியானால் அந்த புதினாவைக் கொண்டு சட்னி செய்யுங்கள்.
அதுவும் வழக்கமாக செய்வது போன்று செய்யாமல், சற்று வித்தியாசமாக வேர்க்கடலை சேர்த்து செய்யுங்கள். இதனால் சட்னி இன்னும் அற்புதமான சுவையில் இருக்கும். முக்கியமாக இந்த சட்னி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு புதினா வேர்க்கடலை சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே புதினா வேர்க்கடலை சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வறுத்த வேர்க்கடலை - 1/4 கப்
* புதினா - 1 கப்
* கொத்தமல்லி - 1/4 கப்
* சிறிய அளவிலான வெங்காயம் - 1 (நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 3
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* புளி - 1 சிறிய துண்டு
* பூண்டு - 2 பல்
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வேர்க்கடலையைப்
போட்டு மிதமான தீயில் வைத்து பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைக்க
வேண்டும்.
* பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், சீரகம், வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து
பொன்னிறமாகும் வரை ஒரு 2-3 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்பு அதில் புதினா, கொத்தமல்லி, புளி ஆகியவற்றை சேர்த்து, 1
நிமிடம் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில், வறுத்த வேர்க்கடலை மற்றும் வதக்கிய புதினா
கலவையை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு மற்றும் நீரை ஊற்றி நன்கு
மென்மையாக அரைத்துக் கொண்டால், சுவையான புதினா வேர்க்கடலை சட்னி
தயார்.
* வேண்டுமானால் சட்னியை அரைத்த பின், கடுகு, உளுத்தம் பருப்பு,
கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்துக் கொள்ளலாம்.
Image Courtesy: indianveggiedelight



Click it and Unblock the Notifications
