Latest Updates
-
வெஜ் கோலாப்பூரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு சூப்பரா இருக்கும் -
சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சுதந்திர தின ஸ்பெஷல் மூவர்ண பூரியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 15 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டத்தின் சாவி கைக்கு வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
ஆகஸ்ட் 17-ல் சூரியன் சிம்மம் ராசிக்கு செல்வதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா?
ஒருடைம் புதினா சட்னியை இந்த மாதிரி செய்யுங்க.. வீட்டுல இருக்குறவங்க 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க..
Puthina Chutney Recipe In Tamil: காலையில் இட்லிக்கு சட்னி சரியான காம்பினேஷனாக இருக்கும். உங்கள் வீட்டில் காலையில் இட்லி செய்யப் போகிறீர்களா? அந்த இட்லிக்கு என்ன சட்னி செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் புதினா உள்ளதா?
அப்படியானால் அந்த புதினாவைக் கொண்டு சட்னி செய்யுங்கள். அதுவும் வழக்கமாக நீங்கள் செய்யும் புதினா சட்னி போரடித்துவிட்டால், இந்த ஸ்டைலில் ட்ரை செய்யுங்கள். இது நிச்சயம் உங்கள் வீட்டில் உள்ளோர் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு புதினா சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே புதினா சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 3 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 3
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* பூண்டு - 3 பல்
* பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
* தக்காளி - 1 (நறுக்கியது)
* புளி - சிறிய துண்டு
* புதினா - 2 கைப்பிடி
* துருவிய தேங்காய் - 1/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு..
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடலைப் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
* பின் அதில் வரமிளகாய் சேர்த்து லேசாக வறுத்து, இரண்டையும் ஒரு
தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே வாணலியில் உள்ள எண்ணெயில் நறுக்கிய வெங்காயம் மற்றும்
பூண்டு சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பிறகு பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து லேசாக மென்மையாகும் வரை வதக்க
வேண்டும்.
* பின் அதில் புளி மற்றும் புதினாவை சேர்த்து, 1 நிமிடம் வதக்கி
இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வறுத்த கடலைப்பருப்பு மற்றும் வரமிளகாய்
சேர்த்து, அத்துடன் துருவிய தேங்காய் மற்றும் சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து சற்று கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அத்துடன் வதக்கிய வெங்காய புதினா கலவையை சேர்த்து சிறிது நீரை
ஊற்றி, சற்று கொரகொரவென்று அரைத்து, ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை
சேர்த்து தாளித்து சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான புதினா
சட்னி தயார்.
Image Courtesy: Tamil Food Corner



Click it and Unblock the Notifications