Latest Updates
-
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்..
2 கைப்பிடி புதினா இருந்தா.. இட்லிக்கு இப்படி சட்னி செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்..
Pudina Thakkali Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி தான் டிபனா? அந்த இட்லிக்கு உங்கள் வீட்டில் உள்ளோர் சட்னியைத் தான் விரும்பி சாப்பிடுவார்களா? இந்த இட்லிக்கு பெரும்பாலும் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, புதினா சட்னி, மல்லி சட்னி என்று தான் செய்வீர்களா? அதுவும் உங்கள் வீட்டில் உள்ளோர் புதினா சட்னியை விரும்பி சாப்பிடுவார்களா? இதனால் இந்த சட்னியை அடிக்கடி செய்வீர்களா?
அடுத்தமுறை புதினா சட்னி செய்வதாக இருந்தால், வழக்கமாக செய்வதை விட, கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு புதினா சட்னியை செய்து பாருங்கள். இப்படி செய்யும் போது உங்கள் வீட்டில் உள்ளோர் வழக்கமாக சாப்பிடுவதை விட அதிகமாக சாப்பிடுவார்கள். முக்கியமாக புதினா சட்னி பிடிக்காதவர்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு புதினா தக்காளி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே புதினா தக்காளி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* பெருங்காயம் - சிறிய கட்டி
* வரமிளகாய் - 6
* புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
* பச்சை மிளகாய் - 4
* தக்காளி - 2
* உப்பு - சுவைக்கேற்ப
* புதினா - 2 கைப்பிடி
* கொத்தமல்லி - 1 கைப்பிடி
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பு, கட்டிப் பெருங்காயம் சேர்த்து
பொன்னிறமாக வறுத்து, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதே எண்ணெயில் வரமிளகாய் மற்றும் புளியை சேர்த்து நன்கு
வதக்கி, அதையும் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து அந்த எண்ணெயில் பச்சை மிளகாயை சேர்த்து வெள்ளையாகும் வரை
வதக்கி, தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* கடைசியாக அதே வாணலியில் உள்ள எண்ணெயில் தக்காளியை சேர்த்து,
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின் அதில் புதினா மற்றும் கொத்தமல்லியைத் தூவி, அத்துடன் மஞ்சள்
தூளையும் சேர்த்து சுருண்டு வரும் வரை வதக்கி இறக்கி குளிர வைக்க
வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வறுத்த வரமிளகாய், உளுத்தம் பருப்பு,
பெருங்காயம், புளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு அதில் தக்காளி, புதினா மற்றும் கொத்தமல்லியை சேர்த்து நன்கு
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு கிண்ணத்தில் அரைத்த சட்னியை சேர்த்து, தேவையான அளவு
நீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து
தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான புதினா தக்காளி
சட்னி தயார்.



Click it and Unblock the Notifications