Latest Updates
-
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
புதினா சட்னி செய்யும் போது இந்த 1 பொருளை சேர்த்துக்கோங்க.. ருசி தூக்கலா செமயா இருக்கும்...
Pudina Chutney Recipe In Tamil: உங்கள் வீட்டில் இட்லி, தோசைக்கு பெரும்பாலும் சட்னியை தான் செய்வீர்களா? அதுவும் நீங்கள் அடிக்கடி புதினா சட்னியை செய்வீர்களா? எப்போதும் ஒரே சுவையில் தான் புதினா சட்னியை செய்வீர்களா? அப்படியானால் ஒருமுறை சற்று வித்தியாசமான சுவையில் புதினா சட்னியை செய்யுங்கள்.
அதுவும் புதினா சட்னியை அரைக்கும் போது ஒரே ஒரு பொருளை மட்டும் கூடுதலாக சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால் சுவை இன்னும் பிரமாதமாக இருக்கும். அது வேறொன்றும் இல்லை, நெல்லிக்காய் தான். இப்படி நெல்லிக்காயை சேர்க்கும் போது, அந்த சட்னி சத்தானதாக இருக்கும்.

உங்களுக்கு புதினா சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே புதினா சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டீஸ்பூன் + 1 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 4
* சின்ன வெங்காயம் - 10
* பூண்டு - 5 பல்
* இஞ்சி - 1 இன்ச்
* பச்சை மிளகாய் - 2
* பெரிய நெல்லிக்காய் - 2 (நறுக்கியது)
* புளி - சிறிய துண்டு
* புதினா - 1 கைப்பிடி
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி, அத்துடன் கடலைப் பருப்பு உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக
வறுக்க வேண்டும்.
* அதன் பின் அதில் வரமிளகாய் சேர்த்து வறுத்து இறக்கி, ஒரு தட்டில்
போட்டுக் குளிர வைக்க வேண்டும்.
* பின் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி
சூடானதும், நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு மற்றும் இஞ்சியை
சேர்த்து, நன்க கண்ணாடி பதத்திற்கு வெங்காயம் வரும் வரை வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, நறுக்கிய நெல்லிக்காயை
சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.
* பிறகு அதில் புளி மற்றும் புதினாவை சேர்த்து நன்கு வதக்கி இறக்க
வேண்டும்.
* அடுத்து அதில் துருவிய தேங்காயை சேர்த்து, அத்துடன் மஞ்சள் தூள்
மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை மற்றும் வதக்கிய
வெங்காயம், தக்காளியையும் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்து,
ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு
நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத்
தூள், கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளித்து, சட்னியுடன்
சேர்த்தால் சுவையான புதினா சட்னி தயார்.



Click it and Unblock the Notifications











