Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
சன்டே ஸ்பெஷல் - புதினா சிக்கன் மசாலா
உங்கள் வீட்டில் சிக்கன் வாங்கியுள்ளீர்களா? இன்று வித்தியாசமான சிக்கன் ரெசிபியை செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் புதினா சிக்கன் மசாலாவை செய்யுங்கள்.
உங்கள் வீட்டில் சிக்கன் வாங்கியுள்ளீர்களா? இன்று வித்தியாசமான சிக்கன் ரெசிபியை செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் புதினா சிக்கன் மசாலாவை செய்யுங்கள். இந்த புதினா சிக்கன் மசாலா சாதம், சப்பாத்தி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். முக்கியமாக இந்த சிக்கன் மசாலா செய்வது மிகவும் சுலபம். மேலும் இது பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும். பேச்சுலர்களும் இந்த ரெசிபியை முயற்சிக்கலாம்.

உங்களுக்கு புதினா சிக்கன் மசாலா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே புதினா சிக்கன் மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சிக்கன் - 1/2 கிலோ
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 3/4 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
அரைப்பதற்கு...
* புதினா இலைகள் - 1 கையளவு
* பச்சை மிளகாய் - 2
தாளிப்பதற்கு...
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 3
* பிரியாணி இலை - 1
செய்முறை:
* முதலில் சிக்கனை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் புதினா மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் வெங்காயத்தை சேர்த்து நிறம் மாற வதக்க வேண்டும்.
* பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, அதன் பின் தக்காளியை சேர்த்து, சிறிது உப்பு தூவி வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் கழுவிய சிக்கனை சேர்த்து கிளறி, 1/2 கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, மூடி வைத்து சிக்கனை வேக வைக்க வேண்டும்.
* சிக்கன் பாதியாக வெந்ததும், அதில் அரைத்து வைத்துள்ள புதினா பேஸ்ட்டை சேர்த்து கிளறி, சிக்கனை நன்கு வேக வைக்க வேண்டும்.
* சிக்கன் நன்கு மென்மையாக வெந்ததும், அதில் மிளகுத் தூளைத் தூவி கிளறி, இறக்கினால், சுவையான புதினா சிக்கன் மசாலா தயார்.
Image Courtesy: poornimacookbook



Click it and Unblock the Notifications