Latest Updates
-
அக்டோபர் 23, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
அக்டோபர் இறுதியில் உதயமாகும் சுக்கிரன்: இந்த 3 ராசிகளின் பணப்பிரச்சனை தீர்ந்து, வங்கி இருப்பு அதிகரிக்கும்.. -
Vastu Tips: வாஸ்துப்படி ஃப்ரிட்ஜ் மேல் இந்த பொருட்களை வெக்காதீங்க.. இல்லன்னா வீட்டுல பண இழப்பு அதிகரிக்கும்.. -
அக்டோபர் 24-ல் புதன் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 4 ராசிகளின் பணக்கஷ்டம் முடிவுக்கு வரப்போகுதாம் -
நவம்பர் மாத தொடக்கத்தில் ஒன்றிணையும் சுக்கிரன்-சந்திரன்: இந்த 3 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்! -
சரவணபவன் காலிஃபிளவர் குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களுக்கு சிறந்த ரோல்மாடலாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
குட்டி போண்டாவும், கார சட்னியும் - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
கிரகப்பிரவேசத்தின் போதும், புதிய வீட்டிற்கு குடிபோகும் போதும் முதலில் ஏன் பால் காய்ச்சுகிறார்கள் தெரியுமா? -
இதுல ஒரு காட்டுப்பாதையை தேர்ந்தெடுங்க.. உங்களை மிகவும் சோர்வடையச் செய்வது எதுன்னு சொல்றோம்..
தினமும் இந்த லட்டுவை 1 சாப்பிடுங்க.. உடம்புல இரத்தமும் அதிகரிக்கும்.. எலும்பும் வலுபெறும்..
Kambu Laddu Recipe In Tamil: உங்கள் பிள்ளைகள் மற்றும் வீட்டில் உள்ளோரின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டுமா? அவர்களின் ஆரோக்கியத்திற்காக பார்த்து பார்த்து சமைத்து கொடுப்பீர்களா? உங்கள் வீட்டில் இருப்போருக்கு உடம்பில் எவ்வித பிரச்சனையும் வரக்கூடாதா?
குறிப்பாக இரத்த சோகை, எலும்பு தொடர்பான பிரச்சனை எதுவும் வரக்கூடாதா? அப்படியானால் கம்பு லட்டை தினமும் 1 சாப்பிட கொடுங்கள். இந்த லட்டுவை பள்ளிக்கு ஸ்நாக்ஸாகவும் கொடுக்கலாம் அல்லது மாலை வேளையில் பசியுடன் இருக்கும் போதும் சாப்பிட கொடுக்கலாம்.

உங்களுக்கு கம்பு லட்டுவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கம்பு லட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நெய் - 1 டீஸ்பூன் + 1 டீஸ்பூன் + 1 டீஸ்பூன் + 8 டீஸ்பூன்
* வெள்ளை எள்ளு - 100 கிராம்
* வறுத்த வேர்க்கடலை - 150 கிராம் (தட்டிக் கொள்ளவும்)
* பாதாம் - 75 கிராம் (பொடியாக நறுக்கியது)
* உலர் திராட்சை - 25 கிராம்
* கம்பு மாவு - 1/4 கிலோ
* வெல்லம் - 400 கிராம்
* தண்ணீர் - 1/2 டம்ளர்
* ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன்
* சுக்குத் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - 2 சிட்டிகை
செய்முறை:
* முதலில் முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன்
நெய் ஊற்றி சூடானதும், வெள்ளை எள்ளு விதைகளை சேர்த்து, பொன்னிறமாக
வறுத்து, ஒரு தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும்.
* பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி
சூடானதும், தட்டி வைத்துள்ள வறுத்த வேர்க்கடலையை சேர்த்து, நன்கு
வறுத்து, அதை எள்ளு விதைகளுடன் சேர்த்து குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மீண்டும் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன்
நெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய பாதாமை சேர்த்து நன்கு
வறுத்து, அத்துடன் உலர் திராட்சையையும் சேர்த்து நன்கு வறுத்து,
அதையும் தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும்.
* அதன் பின் மீண்டும் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன்
நெய் ஊற்றி, கம்பு மாவை சேர்த்து நன்கு வறுக்க வேண்டும். அப்படி கம்பு
மாவை வறுக்கும் போது, அவ்வப்போது 2 டீஸ்பூன் என 8 டீஸ்பூன் வரை நெய்
ஊற்றி, பச்சை வாசனை போக வறுத்து, ஒரு தட்டில் போட்டு குளிர வைக்க
வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் பொடித்த வெல்லத்தை போட்டு, அதில் 1/2
டம்ளர் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, வெல்லத்தை கரைத்து இறக்கி
வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
* பின் வடிகட்டிய வெல்லத்தை மீண்டும் பாத்திரத்தில் ஊற்றி, 1 கம்பி
பதத்திற்கு வரும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
* அதற்குள் வறுத்த நட்ஸ்களில் பாதியை மிக்சர் ஜாரில் போட்டு, ஒருமுறை
அரைத்து சேர்க்க வேண்டும். பின் அதில் ஏலக்காய் தூள், சுக்கு தூள்,
உப்பு மற்றும் வறுத்த கம்பு மாவை சேர்த்து நன்கு கலந்து விட
வேண்டும்.
* வெல்லப்பாகு 1 கம்பி பதத்திற்கு வந்ததும், அதை இறக்கி, கம்பு மாவு
கலவையுடன் சேர்த்து, கரண்டியால் நன்கு கிளறி விட்டு, குளிர வைக்க
வேண்டும். கலவையானது கை பொறுக்கும் சூட்டிற்கு வந்ததும், கொஞ்சம்
கொஞ்சமாக எடுத்து உருட்டினால், கம்பு உருண்டை தயார்.



Click it and Unblock the Notifications
