Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
மழை நேரத்துல மிளகு வெச்சு.. இப்படி ஒருவாட்டி சட்னி செய்யுங்க.. தோசைக்கு வேற லெவல்-ல இருக்கும்...
Pepper Chutney Recipe In Tamil: காலையில் இட்லி, தோசைக்கு எப்பவும் ஒரே மாதிரியான சட்னியை செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமாக, அதே சமயம் ஆரோக்கியமான ஒரு சட்னியை செய்ய நினைக்கிறீர்களா? அதுவும் தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், நிறைய பேர் சளி, இருமல் பிரச்சனையால் அவதிப்பட்டுக் கொண்டிருப்பார்கள்.
இந்நிலையில் அந்த சளி, இருமலில் இருந்து நிவாரணம் அளிக்கும் வகையில் சட்னியை செய்தால் இன்னும் அருமையாக இருக்கும். இதுவரை நீங்கள் தேங்காய் சட்னி, தக்காளி, சட்னி, மிளகாய் சட்னி என்று எத்தனையோ சட்னியை செய்திருக்கலாம். ஆனால் மிளகு சட்னியை செய்திருக்கிறீர்களா? என்ன புதுமையாக உள்ளதா?

ஆம், மிளகு கொண்டும் அட்டகாசமான சட்னி செய்யலாம். இந்த சட்னி செய்வது மிகவும் சுலபம். மழை காலத்தில் இந்த சட்னியை அடிக்கடி செய்து சாப்பிட்டால், சளி பிடிப்பதைத் தவிர்க்கலாம். இந்த மிளகு சட்னி தோசை, இட்லியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.
உங்களுக்கு மிளகு சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மிளகு சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* மிளகு - 6-7 டேபிள் ஸ்பூன்
* இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தக்காளி - 6 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* வரமிளகாய் - 3
* தேங்காய் - 3 சில்லு (துருவியது)
* நாட்டுச்சர்க்கரை - 1 சிட்டிகை
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 ஸ்பூன்
* வரமிளகாய் - 3
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், 6-7 டேபிள் ஸ்பூன் மிளகை சேர்த்து நல்ல மணம்
வரும் வரை வறுத்து, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே எண்ணெயில் இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து வதக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு
தூவி நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் 3 வரமிளகாயை சேர்த்து வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் துருவிய தேங்காயை சேர்த்து 2 நிமிடம் கிளறி இறக்கி
குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, அத்துடன்
மிளகையும் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1 சிட்டிகை நாட்டுச்சர்க்கரை சேர்த்து அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு
நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* பின் அதில் அரைத்த சட்னியை சேர்த்து கிளறி, 2 நிமிடம் வேக வைத்து
இறக்கினால், சுவையான மிளகு சட்னி தயார்.



Click it and Unblock the Notifications