Latest Updates
-
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்..
பச்சை பட்டாணியும், வெந்தய கீரையும் இருக்கா? இப்படி ஒரு மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு டக்கரா இருக்கும்..
Methi Matar Malai Recipe In Tamil: இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? அந்த சப்பாத்திக்கு ஒரு அட்டகாசமான சைடு டிஷ் செய்து உங்கள் வீட்டில் உள்ளோரை அசத்த நினைக்கிறீர்களா? அப்படியானால் வடஇந்தியாவில் மிகவும் பிரபலமான மெத்தி மட்டர் மலாய் ரெசிபியை செய்யுங்கள்.
இந்த மெத்தி மட்டர் மலாய் சப்பாத்தி, நாண் போன்றவற்றுடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்கள் வீட்டிற்கு விருந்தினர்கள் வந்திருக்கும் போது, இந்த ரெசிபியை செய்தால், அவர்களின் பாராட்டுக்களையும் பெறலாம். உங்களுக்கு மெத்தி மட்டர் மலாய் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?
கீழே மெத்தி மட்டர் மலாய் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வெந்தய கீரை - 2 கப்
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 1
* பிரியாணி இலை - 1
* அன்னாசிப்பூ - 1
* பச்சை பட்டாணி - 1/2 கப்
* பிரஷ் க்ரீம்/மலாய் - 1/2 கப்
* ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்
* சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
அரைப்பதற்கு...
* பெரிய வெங்காயம் - 2
* பூண்டு - 2-3 பல்
* இஞ்சி - 1/2 இன்ச்
* முந்திரி - 10
* பச்சை மிளகாய் - 2
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை
சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் 2 கப் நீரை ஊற்றி, 1/4 டீஸ்பூன் உப்பு
சேர்த்து, நீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், வெந்தயக் கீரையை
சேர்த்து, கீரை நன்கு வெந்ததும், அதை தனியாக ஒரு தட்டில் எடுத்து
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, பிரியாணி இலை சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அரைத்த மசாலாவை சேர்த்து 5 நிமிடம் மூடி வைத்து வேக வைக்க
வேண்டும்.
* மசாலாவில் உள்ள பச்சை வாசனை போனதும், பட்டாணியை சேர்த்து நன்கு வேக
வைக்க வேண்டும்.
* பட்டாணி நன்கு வெந்ததும், வெந்தயக் கீரையை சேர்த்து கிளறி, பிரஷ்
க்ரீம், ஏலக்காய் தூள், சர்க்கரை, உப்பு, கரம் மசாலா சேர்த்து,
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, குறைவான தீயில் வைத்து 2-3 நிமிடம்
வேக வைத்து இறக்கினால், சுவையான மெத்தி மட்டர் மலாய் தயார்.
Image Courtesy: sharmispassion



Click it and Unblock the Notifications