Latest Updates
-
தக்காளி தோசையும், உடுப்பி வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 18 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம் -
செவ்வாய்-ராகுவால் உருவான அங்காரக யோகம்: செப்டம்பர் 02 வரை இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
குருபகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் அக்டோபர் மாதம் வரை ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
முகம் கருப்பா இருக்குதா? அப்ப மஞ்சளைக் கொண்டு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
ஆந்திரா புதினா தொக்கு ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - சாதம், தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
1/4 கப் கோதுமை மாவும், 2 வாழைப்பழமும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட் வடை ட்ரை பண்ணுங்க.. -
Avani 2026 Rasipalan: ஆவணி மாதத்தில் துரதிர்ஷ்டத்தால் அவதிப்படப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
Avani Matha Rasipalan 2026: ஆவணி மாதம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும் தெரியுமா? -
அணுகுண்டு வெடித்து உலகமே அழிந்தாலும் இந்த உயிரினங்கள் அழியாதாம் - எந்தெந்த உயிரினங்கள் தெரியுமா?
தக்காளி சட்னியை ஒருமுறை இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்...
Mess Style Tomato Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசை செய்யப் போகிறீர்களா? பெரும்பாலும் உங்கள் வீட்டில் இட்லி, தோசைக்கு தக்காளி சட்னி தான் செய்வீர்களா? தக்காளி சட்னியையே பலவாறு செய்யலாம். அதில் ஒரு ஸ்டைல் தான் மெஸ் ஸ்டைல் தக்காளி சட்னி.
எப்படி ஹோட்டல் சட்னியின் சுவை வித்தியாசமாக இருக்குமோ, அதேப் போல் மெஸ் சட்னியின் சுவையும் வித்தியாசமாக இருக்கும். அதுவும் மெஸ்களில் செய்யப்படும் தக்காளி சட்னியின் சுவையே தனி தான். உங்கள் வீட்டில் அடுத்தமுறை தக்காளி சட்னி செய்யும் போது, இந்த மெஸ் ஸ்டைல் தக்காளி சட்னியை தவறாமல் ட்ரை செய்து பாருங்கள்.

உங்களுக்கு மெஸ் ஸ்டைல் தக்காளி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மெஸ் ஸ்டைல் தக்காளி சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கைப்பிடி
* பெரிய வெங்காயம் - 3 (நறுக்கியது)
* சின்ன வெங்காயம் - 20 (நறுக்கியது)
* வரமிளகாய் - 3
* பச்சை மிளகாய் - 2
* தக்காளி - 5 (நறுக்கியது)
* பூண்டு - 4 பல்
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* வரமிளகாய் - 1
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கறிவேப்பிலை சேர்த்து தாளித்ததும், பெரிய வெங்காயம்
மற்றும் சின்ன வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க
வேண்டும்.
* பின்னர் அதில் வரமிளகாய் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து சிறிது
நேரம் வதக்க வேண்டும்.
* பின்பு அதில் பூண்டு சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கி, முக்கால்வாசி வரை வேக
வைத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் வதக்கியதை மிக்சர் ஜாரில் போட்டு, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து
நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அரைத்ததை கிண்ணத்தில் போட்டு, அதில் சிறிது நீரை ஊற்றி கலந்து
கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை,
வரமிளகாய் சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான
மெஸ் ஸ்டைல் தக்காளி சட்னி தயார்.
Image Courtesy: kaathuvaakulasamayal



Click it and Unblock the Notifications