Latest Updates
-
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்?
மீல்மேக்கரை இந்த மாதிரி தொக்கு செஞ்சு பாருங்க.. சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமா இருக்கும்...
Mealmaker Thokku Recipe In Tamil: இரவு சப்பாத்திக்கு ஒரு அட்டகாசமான சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அதுவும் ஒரு அசைவ ரெசிபியின் சுவையைக் கொடுக்கும் ஒரு சைவ ரெசிபியை செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் மீல் மேக்கர் உள்ளதா? அப்படியானால் அந்த மீல் மேக்கரைக் கொண்டு தொக்கு செய்யுங்கள். இந்த மீல்மேக்கர் தொக்கு சப்பாத்தி, பூரியுடன் மட்டுமின்றி, சாதத்துடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும்.
உங்களுக்கு மீல் மேக்கர் தொக்கு ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மீல் மேக்கர் தொக்கு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
* மீல் மேக்கர் - 1 கப்
* சுடுநீர்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (துண்டுகளாக்கப்பட்டது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 3
* ஏலக்காய் - 2
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 1/2 கப்
* எண்ணெய் - 3-4 டேபிள் ஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 10
* கறிவேப்பிலை - 1 கொத்து
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் மீல் மேக்கரை எடுத்து, அதில் சுடுநீரை
ஊற்றி, 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். 10 நிமிடம் கழித்து, நீரை
வடிகட்டிவிட்டு, குளீர்ந்த நீரால் 2 முறை அலசிவிட்டு, அதில் உள்ள
அதிகப்படியான நீரை கைகளால் பிழிந்துவிட்டு, கத்தியால் துண்டுகளாக்கி
தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் குக்கரில் துண்டுகளாக்கப்பட்ட மீல்மேக்கர், வெங்காயம்,
தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட், பட்டை, கிராம்பு,
ஏலக்காய், மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள், கரம் மசாலா,
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, 1/2 கப் நீரை ஊற்றி, அடுப்பில் வைத்து,
குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3-4 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து
கண்ணாடி பதத்திற்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் வேக வைத்த மீல் மேக்கரை மட்டும் சேர்த்து, நன்கு சுண்ட
5 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்பு அதில் குக்கரை உள்ள மசாலா நீரை ஊற்றி, மூடி வைத்து 10
நிமிடம் மிதமான தீயில் வைத்து கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லியைத்
தூவி கிளறினால், சுவையான மீல்மேக்கர் தொக்கு தயார்.
Image Courtesy: Madras Virunthu



Click it and Unblock the Notifications