Latest Updates
-
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா?
மீல்மேக்கரை எப்பவும் ஒரே மாதிரி சமைக்காம.. ஒருமுறை இப்படி பெப்பர் கிரேவி செய்யுங்க.. டேஸ்ட் அள்ளும்..
Mealmaker Pepper Gravy Recipe In Tamil: இன்று உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? அந்த சப்பாத்திக்கு வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறான ஒரு அற்புதமான சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் மீல் மேக்கர் உள்ளதா?
அப்படியானால் அந்த மீல் மேக்கரைக் கொண்டு வழக்கமாக செய்வது போன்று கிரேவி செய்யாமல், பெப்பர் கிரேவி செய்யுங்கள். இந்த பெப்பர் கிரேவி சப்பாத்தி, பூரியுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு மீல்மேக்கர் பெப்பர் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மீல்மேக்கர் பெப்பர் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மீல்மேக்கர் - 2 கப்
* மிளகு - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 3
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கிராம்பு - 4
* பட்டை - 2 துண்டு
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - கிரேவிக்கு தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, அதில்
மீல்மேக்கரை வேக வைக்க தேவையான அளவு நீரை ஊற்றி, அதில் சிறிது உப்பு
சேர்த்து, நீரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* நீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் மீல் மேக்கரை சேர்த்து
அடுப்பை அணைத்துவிட்டு, 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* 5 நிமிடம் கழித்து, மீல் மேக்கரை குளிர்ந்த நீரில் இரண்டு முறை
அலசிவிட்டு, மீல் மேக்கரில் உள்ள அதிகப்படியான நீரை பிழிந்துவிட
வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மிளகு, சோம்பு,
வரமிளகாய் சேர்த்து, நிறம் மாறும் வரை வறுத்து இறக்கி குளிர வைத்து,
மிக்சர் ஜாரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்து பொடி செய்து கொள்ள
வேண்டும்.
* பிறகு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கிராம்பு, பட்டை, சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக
வதக்க வேண்டும்.
* பிறகு அதில் தக்காளி மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு
பச்சை வாசனை போக வாக்க வேண்டும்.
* அடுத்து அதில் மஞ்சள் தூள், மல்லித் தூள் மற்றும் அரைத்த பொடியை
சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு 2 நிமிடம் கிளறி விட
வேண்டும்.
* இறுதியாக மீல்மேக்கரை சேர்த்து நன்கு கிளறி விட்டு, கிரேவிக்கு
தேவையான அளவு நீரை ஊற்றி, மிதமான தீயில் வைத்து 10 நிமிடம் கொதிக்க
வைத்து, மேலே கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான மீல்மேக்கர்
பெப்பர் கிரேவி தயார்.
Image Courtesy: Apoorvaa's Nalabagam



Click it and Unblock the Notifications