Latest Updates
-
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்..
சப்பாத்திக்கு மீல் மேக்கர் வெச்சு ஒருடைம் இப்படி கிரேவி செய்யுங்க.. 2 சப்பாத்தி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க..
Mealmaker Gravy In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி சப்பாத்தி செய்வீர்களா? அந்த சப்பாத்திக்கு எப்போதும் ஒரே சுவையில் தான் சைடு டிஷ் செய்வீர்களா? தற்போது ஆங்காங்கு மழை பெய்து, காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், அசைவ உணவை சாப்பிட வேண்டுமென்று தோன்றும்.
இந்நிலையில் வீட்டில் மீல் மேக்கர் இருந்தால், அதைக் கொண்டு அசைவ கிரேவி சுவையில் அருமையான கிரேவி செய்யுங்கள். இப்படி கிரேவி செய்யும் போது, வீட்டில் உள்ளோர் வழக்கத்தை விட அதிகமாக சாப்பிடுவார்கள். முக்கியமாக இந்த கிரேவி செய்வதற்கு சுலபமாக இருக்கும். பேச்சுலர்களும் செய்யலாம்.

உங்களுக்கு அசைவ கிரேவி சுவையில் மீல் மேக்கர் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மீல் மேக்கர் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மீல் மேக்கர் - 2 கப்
* கெட்டி தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
கிரேவிக்கு...
* எண்ணெய் - 1 1/2 டீஸ்பூன்
* பிரியாணி இலை - 2
* சோம்பு - 1 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பச்சை மிளகாய் - 2 (கீறியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 2 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா/சிக்கன் மசாலா - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* சுடுநீர் - 3 கப்
அரைப்பதற்கு...
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* கசகசா - 1 டீஸ்பூன்
* முந்திரி - 5
* தண்ணீர் - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் மீல் மேக்கரை போட்டு, அதில் நன்கு
கொதிக்கும் நீரை ஊற்றி, 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து, மீல் மேக்கரை நீரில் 2 முறை கழுவி விட்டு, பின்
அதில் உள்ள அதிகப்படியான நீரை பிழிந்துவிட்டு, ஒரு பாத்திரத்தில்
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அந்த மீல் மேக்கருடன் கெட்டி தயிர், மஞ்சள் தூள், மிளகாய்
தூள், உப்பு சேர்த்து நன்கு பிரட்டி, மூடி வைத்து 10 நிமிடம் ஊற வைக்க
வேண்டும்.
* பிறகு ஒரு பேனை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி
சூடானதும், ஊறு வைத்துள்ள மீல் மேக்கரை சேர்த்து நன்கு ப்ரை செய்து
ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் துருவிய தேங்காய், கசகசா, முந்திரி சேர்த்து,
சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பிரியாணி இலை, சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையை
சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து
நன்கு பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின்பு அதில் மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து நன்கு
கிளறி விட வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா/ சேர்த்து
நன்கு எண்ணெய் பிரியும் வரை கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் ப்ரை செய்து வைத்துள்ள மீல் மேக்கரை சேர்த்து கிளறி,
கிரேவிக்கு தேவையான அளவு சுடுநீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து மிதமான
தீயில் வைத்து 10 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, அரைத்து வைத்துள்ள தேங்காய்
விழுதை சேர்த்து கிளறி, கிரேவிக்கு தேவையான அளவு நீரை ஊற்றி, உப்பு
சுவை பார்த்து, வேண்டுமானால் உப்பு சேர்த்து கிளறி, மீண்டும் மூடி
வைத்து 5 நிமிடம் கொதிக்க வைத்து, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால்,
சுவையான மீல் மேக்கர் கிரேவி தயார்.



Click it and Unblock the Notifications