Latest Updates
-
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் ஜூன் 08 வரை 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹோட்டல் ரவா உப்புமா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு தெரிஞ்சு ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 14 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கனவுகள் பலிக்கும் நாளாக இருக்குமாம் -
50 ஆண்டுகளுக்கு பின் சனி ஜெயந்தியில் உருவாகும் அரிய யோகம்: இந்த 3 ராசிக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது..! -
காதலில் சம்மதம் முக்கியமா? டெல்லி உயர்நீதிமன்றத்தின் இந்த அதிரடி தீர்ப்பு சொல்லும் உண்மை என்ன தெரியுமா? -
எடை இழப்புக்கு உதவும் வெஜிடேபிள் சிக்கன் சூப் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
'Main Tera' Day ட்ரெண்டில் காதலை சொல்லப் போறீங்களா? இந்த பாதுகாப்பு டிப்ஸ் தெரியாம மெசேஜ் அனுப்பாதீங்க, சிக்கலில் மாட்டிக்காதீங்க! -
ஒருடைம் வாழைப்பழத்தை வெச்சு இப்படி ஃபேஸ் மாஸ்க் போடுங்க.. முகம் பளிச்சென்று பிரகாசமா இருக்கும்.. -
Sonia Gandhi: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோனியா காந்தி - உண்மையில் அவருக்கு என்ன பிரச்சனை? -
வெயில் கொளுத்துதா? வீட்டை குளிர்ச்சியாக வைக்க இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா போதும், ஏசி கூட தேவையில்லை!
மீல் மேக்கரை இப்படி செஞ்சா.. ஒரு சப்பாத்தி சாப்பிடுறவங்க 2 சப்பாத்தி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க..
Meal Maker Pepper Fry: மீல் மேக்கர் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஒரு உணவுப் பொருள். இதன் சுவை அசைவ உணவின் சுவையைக் கொண்டிருப்பதால், குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். பெரும்பாலும் மீல் மேக்கரை பிரியாணியில் தான் சேர்த்து சாப்பிடுவோம்.
ஆனால் அந்த மீல் மேக்கரைக் கொண்டு பெப்பர் ப்ரை செய்யலாம் தெரியுமா? ஆம், இந்த மீல் மேக்கர் பெப்பர் ப்ரை வெறுமனே சாப்பிட மட்டுமின்றி, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும்.

முக்கியமாக சப்பாத்திக்கு இந்த மாதிரி சைடு டிஷ் செய்தால், ஒரு சப்பாத்தி சாப்பிடும் குழந்தைகள் 2 சப்பாத்தியை சாப்பிடுவார்கள். மேலும் இது செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும்.
உங்களுக்கு மீல் மேக்கர் பெப்பர் ப்ரை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மீல் மேக்கர் பெப்பர் ப்ரை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மீல் மேக்கர் - 1 கப்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்
* சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
சோயா சில்லி ரோஸ்ட்டிற்கு...
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 2
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 3/4 டீஸ்பூன்
* தக்காளி - 1
* தண்ணீர் - 1/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - 1/4 கப்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் சுடுநீரை எடுத்து, அதில் 1 கப் மீல்
மேக்கரைப் போட்டு, 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் அதை குளிர்ந்த
நீரில் இரண்டு முறை அலசி, நீரை பிழித்துவிட்டு, அதை சிறு
துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
* பின் துண்டுகளாக்கப்பட்ட மீல் மேக்கருடன், மஞ்சள் தூள், மிளகாய்
தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், சோம்வு, கறிவேப்பிலை, அரிசி மாவு, சோள
மாவு மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு பிரட்டிக் கொள்ள
வேண்டும். நீர் எதுவும் சேர்க்க தேவையில்லை.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மீல் மேக்கரை
பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நன்கு சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் நன்கு சூடானதும், அதில் மீல் மேக்கரை சேர்த்து நன்கு
பொரித்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயத்தை சேர்த்து சிறிது நேரம் வதக்க
வேண்டும்.
* பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், கறிவேப்பிலை சேர்த்து ஒருமுறை
கிளறி விட வேண்டும்.
* அதன் பின் கரம் மசாலா, மல்லித் தூள், மிளகாய் தூள் சேர்த்து ஒருமுறை
கிளறி, அரைத்த தக்காளியை சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வேக வைக்க
வேண்டும்.
* இந்த நிலையில் 1/4 கப் நீரை ஊற்றி கிளறி கொதிக்க வைக்க
வேண்டும்.
* கொதி வந்ததும், அதில் மீல் மேக்கரை சேர்த்து கிளறி விட வேண்டும்.
அதன் பின் மிளகுத் தூளை சேர்த்து கிளறிவிட வேண்டும்.
* செமி கிரேவியாக வேண்டுமானால், அதில் மீண்டும் 1/4 கப் நீரை ஊற்றி
கிளறி, 2 நிமிடம் வேக வைத்து பின் மேலே கொத்தமல்லியைத் தூவி
இறக்கினால், சுவையான சோயா பெப்பர் ப்ரை தயார்.
Image Courtesy: Madras samayal



Click it and Unblock the Notifications











