Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
1 கப் மீல் மேக்கர் இருந்தா இந்த மாதிரி செஞ்சு பாருங்க..செம சைடிஷா இருக்கும்..எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க
Meal Maker Manchurian Recipe in Tamil: மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் மற்றும் வீட்டில் உள்ளவர்களுக்கு வாய்க்கு ருசியாக ஏதாவது வித்தியாசமான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு மஞ்சூரியன் என்றால் பிடிக்குமா? எப்போதும் கடைகளில் தான் மஞ்சூரியனை வாங்கி சாப்பிடுவீர்களா? ஒருமுறை ஈஸியான இந்த சோயா மஞ்சூரியனை வீட்டிலேயே முயற்சித்துப் பாருங்கள்.
இந்த சோயா மஞ்சூரியன் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கேட்டு விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும். சோயாவில் புரோட்டின் அதிகமாக உள்ளதால் இது சுவையான உணவாக மட்டுமின்றி ஆரோக்கியமான உணவாகவும் இருக்கும். மேலும் இதை சப்பாத்து, பூரிக்கு சைடிஷாக வைத்தும் சாப்பிடலாம்.

உங்களுக்கு சோயா மஞ்சூரியனை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சோயா மஞ்சூரியனின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையானப் பொருட்கள்:
- 1 கப் சோயா
- 4 டேபிள் ஸ்பூன் சோள மாவு
- ½ குடைமிளகாய்
- ½ பெரிய வெங்காயம்
- 2 கொத்து வெங்காயத்தாள்
- 1 டேபிள்ஸ்பூன் இஞ்சி பொடியாக நறுக்கியது
- 1 டேபிள்ஸ்பூன் பூண்டு பொடியாக நறுக்கியது
- 1 டேபிள்ஸ்பூன் சோயா சாஸ்
- 1 டேபிள்ஸ்பூன் சில்லி சாஸ்
- 1 டீஸ்பூன் சிவப்பு மிளகாய் தூள்
- 1 டீஸ்பூன் மிளகு தூள்
- 1 டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறு
- 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
செய்முறை:
- மீல் மேக்கரை உப்பு கலந்த வெந்நீரில் 5 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
- பின்னர் அதைப் பிழிந்து, மென்மையாகும் வரை உப்பு கலந்த நீரில் வேகவைக்கவும். அதன்பின் நீரை வடித்து, அதைக் கழுவி, பிழிந்து, தனியாக வைக்கவும்.
மேரினேட் செய்ய:
- தயார் செய்து வைத்துள்ள மீல் மேக்கருடன், ஒரு டேபிள் ஸ்பூன் சோள மாவு, சிறிது உப்பு, அரை ஸ்பூன் மிளகுத் தூள், அரை ஸ்பூன் மிளகாய்த் தூள் சேர்த்துப் பிசைந்து 15 நிமிடம் ஊறவைக்கவும்.
- குடைமிளகாயை நீளவாக்கில் நறுக்கி, வெங்காயம் மற்றும் வெங்காயத் தாளை பொடியாக நறுக்கி, தேவையான அனைத்துப் பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு சூடாக்கி, முதலில் ஊறவைத்த சோயா துண்டுகளை மொறுமொறுப்பாக வறுத்துக் கொள்ளவும்.
- மீதமுள்ள எண்ணெயை சூடாக்கி, முதலில் இஞ்சி பூண்டை அதன் நிறம் மாறாமல் ஒரு நிமிடம் வதக்கவும்.
- பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் வெங்காயத் தாளின் வெள்ளை பகுதியைச் சேர்க்கவும். கண்ணாடி பதத்திற்கு மாறும் வரை வதக்கவும்.
- பின்னர் குடைமிளகாயைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். அதன்பின் சில்லி சாஸ் மற்றும் சோயா சாஸ் இரண்டு சாஸ்களையும் சேர்த்து கிளறவும்.
- பின்னர் மீதமுள்ள மிளகு மற்றும் மிளகாய்த் தூளையும் சேர்க்கவும். தேவையான அளவு உப்பு தூவவும்.
- பின் வதக்கிய சோயா துண்டுகளைச் சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் கால் கப் தண்ணீரில் சோள மாவைக் கரைத்து அதில் சேர்த்து கொதிக்க விடவும்.
- இறுதியாக எலுமிச்சை சாறை சேர்த்து வெங்காயத் தாளின் பச்சை பகுதியைச் சேர்த்து நன்கு கிளறினால் சுவையுண சோயா மஞ்சூரியன் ரெடி!



Click it and Unblock the Notifications